விஜய் வருகைக்குப் பிறகு சங்கீதா என்ட்ரி - அனிருத் திருமண விழாவில் கவனம் ஈர்த்த சம்பவம்!
சென்னையில் நடைபெற்ற கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் மற்றும் பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அரசியல், திரையுலகம் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களின் வருகையால் களைகட்டியது.
இந்த விழாவில் தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகிய இருவரும் தனித்தனியாகப் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய சம்பவம் தொடப்பான காணொிளி வெளியாகி இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.

தனியாக வந்த முதல்வர் விஜய்
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் விஜய் கலந்துகொண்டு மணமக்கள் அனிருத் – காவ்யா மாறன் ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்று வரும் விஜய்யின் வருகையும் இந்த விழாவில் முக்கியத்துவம் பெற்றது.
சங்கீதாவின் வருகை
விஜய்யைத் தொடர்ந்து அவரது மனைவி சங்கீதாவும் தனியாக நிகழ்ச்சிக்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார். இருவரும் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், தனித்தனியாக வருகை தந்தது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
விஜய் – சங்கீதா இடையிலான குடும்பப் பிரச்சினைகள் மற்றும் விவாகரத்து தொடர்பான செய்திகள் ஏற்கெனவே பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

இந்நிலையில், விஜய் முதல்வரான பின்னர் சங்கீதா விவாகரத்து வழக்கைத் திரும்பப் பெற்றதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்தச் சூழலில் இருவரும் ஒரே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தனித்தனியாகக் கலந்துகொண்டிருப்பது கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்தத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் விஜய் மட்டுமின்றி, துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் வி.டி. சதீசன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல முக்கிய அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் சங்கமித்த இந்தத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, அனிருத் – காவ்யா மாறன் ஜோடியின் மகிழ்ச்சியான தருணமாக மட்டுமின்றி, விஜய் – சங்கீதாவின் தனித்தனி வருகையாலும் பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |