Relationship Fact: கணவன் - மனைவிக்கு இடையில் காதல் குறையுதா? அப்போ இத தெரிஞ்சிக்கோங்க
சந்தோஷம்-துக்கம், வலி-துன்பம், கோபம்-காதல் போன்றவை திருமண வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகின்றன.
கணவன்- மனைவி வாழ்கின்ற தம்பதிக்கு இடையே அன்பு மிகவும் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இது குறையும் பொழுது உறவில் ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
அதே சமயம், வாழ்க்கையை அழகாக்கும் கருவியாக காதல் இருக்கின்றது. இந்த காதல் வாழ்க்கையில் நாம் விடும் சிறு தவறுகளால் கூடி குறைய வாய்ப்பு இருக்கின்றது.
அப்படியாயின் தம்பதிகளாக இருக்கும் பொழுது காதல் அதிகரிக்க என்னென்ன விடயங்களை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
காதலை அதிகரிக்க சில டிப்ஸ்
1. கணவன் - மனைவியாக உறவுக்குள் செல்லும் போது உறவுகளை வலுப்படுத்த கம்யூனிகேஷன் மிக முக்கியம். இது சரியாக இருந்தால் தம்பதிகள் வாழ்க்கையில் பிரச்சினைகள் குறைவாகவே இருக்கும். எந்தவொரு உறவிலும் பார்க்க தம்பதிகளாக வாழும் பொழுது அது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.
2. எந்தவொரு ஆரோக்கியமான உறவிற்கும் நம்பிக்கை அடித்தளமாக அமைகின்றது. உங்களின் துணைக்கு நீங்கள் நம்பிக்கை கொடுத்து விட்டால் பிரச்சினைகள் வருவது குறைவாக இருக்கும். நம்பிக்கை இல்லாமல் வாழும் தம்பதிகள் காலப்போக்கில் அன்பையும் நெருக்கத்தையும் இழந்து பிரிந்து விடுவார்கள்.
3. கணவன்-மனைவியாக வாழ ஆரம்பிக்கும் பொழுது பொறுப்புக்கள் அதிகரிக்கின்றன. பொறுப்புகளை கவனித்து உறவில் ஈடுபாடு செலுத்தாத போது மன அழுத்தம் பிரச்சினை ஆரம்பிக்கின்றது. கணவன் - மனைவி நெருக்கம் சரியாக இருந்தால் தம்பதிக்கு நடுவில் பிரச்சினைகள் எப்போதும் வராது.
4. திருமண வாழ்க்கையில் ஒருவரையொருவர் பாராட்டுவது மிக அவசியம். உறவில் இருவரும் விட்டு கொடுத்து போக வேண்டும். இது உங்களை சமூகத்தில் சிறந்தவர்களாக காட்டும். துணையின் நற்செயல்களை பாராட்டுவதன் மூலம் சிறந்த குடும்பத்தை உருவாக்கலாம்.
5. சில உறவுகளில் கணவன்- மனைவிக்கு விருப்பு வெறுப்பு என பிரித்து பார்க்க தெரியாது. கணவனுக்கு ஆர்வம் இருக்கும் விடயங்கள் மனைவிக்கு சங்கடத்தை உருவாக்கும். எனவே எப்போதும் துணையின் விருப்பம் தெரியாமல் ஒரு விடயத்தை செய்ய முனையக் கூடாது. இயந்திர வாழ்க்கைக்குள் காதலை நினைவுக் கூர்ந்து செயற்படுவது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |