பல பெண்களை விஷால் யூஸ் பண்ணி தூக்கி எறிந்தாரா? காயத்ரி ரகுராம் வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு
பிரபல நடிகர் விஷால் மீது பாஜக நிர்வாகியான நடிகை காயத்ரி ரகுராய் வன்கொடுமை புகாரை முன்வைத்துள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பிரபல பள்ளியான பிஎஸ்பிபி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்டதால் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ராஜகோபாலுக்கு எதிராக பல பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் விஷாலும் தனது பதிவினை வெளியிட்டுள்ளார்.
விஷால் வெளியிட்டுள்ள பதிவில், பிஎஸ்பிபி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் செய்த பாலியல் தொல்லை என்னைக் குறுகச் செய்கிறது. அந்தப் பள்ளி மூடப்பட வேண்டும் என்பதை உணர வைத்தது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர்களிடம் ஒருவரும், ஒருமுறை கூட மன்னிப்பு கோரவில்லை. இதை ஒரு சாதிப் பிரச்சினையாக மக்கள் மாற்றுவது வெட்கக்கேடானது. மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்த நபர் தூக்கிலிடப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
The Sexual Harrasement by a Teacher from #PSBB makes me cringe & realise that the School should be shut, not once anyone has apologised to the Students/Parents affected, such crimes should be taken really harshly,
— Vishal (@VishalKOfficial) May 28, 2021
I request my friend @Anbil_Mahesh to take strong action pic.twitter.com/jF2MfehyuN
இந்நிலையில் நடிகர் விஷாலின் இந்த பதிவிற்கு காயத்ரி ரகுராம் அளித்துள்ள பதில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காயத்ரி ரகுராம், சினிமா துறையில் இருக்கும் விஷால் அவர்களே முதலில் அந்த துறையில் உள்ள வன்கொடுமை செய்பவர்களை கண்டுபிடித்துவிட்டு, புதிதாக சினிமாவிற்கு வாய்ப்பு கேட்டு வருபவர்களை எப்படி நடத்துகின்றனர் என்பதை கவனியுங்கள்.
மேலும் நீங்களும் உங்கள் நண்பர்களும் இதைப் போன்று எத்தனை பெண்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்திருப்பீர்கள். இவ்வாறு உங்களைப் போன்றோராலேயே நிறைய பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.
சினிமா துறையில் வன்கொடுமை புகார்களை கூறும் பெண்கள் உங்கள் உதவியை நாடும் போது உங்கள் ஹீரோயிசத்தை அங்கே காட்டுவதோடு, உண்மையை சொல்ல போனால், உங்களுடைய "தொடர் அணுகுமுறை"யால் உங்களிடம் இருந்து முன்னணி நடிகைகள் ஓட்டம் பிடிக்கிறார்கள். அதனை முதலில் தெரிந்துகொள்ளுங்கள் என்று தனது ஆதங்கமான பதிலை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.
Being in cinema industry first condemn the sexual predators and harassments. @VishalKOfficial. Look at what’s happening with new entry girls. Look at the harassment on female lead actors. You and your friends come from same clout to use and throw.many women affected by you people
— Gayathri Raguramm (@BJP_Gayathri_R) May 29, 2021