சர்ச்சையில் சிக்கிய PSBB பள்ளியின் வைரலாகும் விளம்பரம்... இதில் நடித்த பெண் யார் தெரியுமா?
சென்னை பிஎஸ்பிபி தனியார் பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவர்களிடம் வன்கொடுமையில் ஈடுபட்ட செயல் நாட்டையே கொந்தளிக்க வைத்துள்ளது.
தற்போது ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இப்பள்ளி குறித்த பல தகவல்கள் தற்போது வெளிவந்த வண்ணம் உள்ளது.
இப்பள்ளி, திரைப்பட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தையார், ஒய்.ஜி.பார்த்தசாரதி யேச்சா குஞ்சா பார்த்தசாரதியால் 30 செப்டம்பர் 1917 – 1990 தொடங்கப்பட்டது.
அவரது மறைவுக்கு பிறகு, ஒய்.ஜி.மகேந்திரனின் தாயும், பார்த்த சாரதியின் மனைவியான பிரபல கல்வியாளரான ராஜலட்சுமி பார்த்தசாரதி நடத்தி வந்தார். பின்பு அவரும் காலமானதையடுத்து, தற்போது அவரது குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர்.
இந்த பள்ளியில் தாங்கள் வெறும் ட்ரஸ்டி மட்டும் தான் என்றும் தாங்கள் இந்த பள்ளியை நடத்தவில்லை என்றும் ஒய் ஜி மகேந்திரனும் மதுவந்தியும் கூறி இருந்தனர். அதே போன்று PSBB பள்ளி நிர்வாகத்தை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், PSBB பள்ளியின் பழைய விள ம்பர காணொளி ஒன்றினை நெட்டிசன்கள் வெளியிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.
இந்த விளம்பரத்தில் நடித்துள்ள பெண் வேறு யாரும் இல்லையாம். இசையமைப்பாளரான அனிருத்தின் அக்கா வைஷ்ணவி. அனிரூத் குடும்பத்திற்கும், ஒய்.ஜி.மகேந்திரன் குடும்பத்தினரும் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Cast!! Cast!! Cast!!
— சினிமாக்காரன் (@ImpriyanSpb) May 24, 2021
Only Brahmins can study in this school?!
What kind of karumam pidicha ideology is this?! #psbbschool #PSBB pic.twitter.com/SNPbsAFcWH