37 வயது நடிகையை திருமணம் செய்ய ஆசைப்படும் 12 வயது மாணவன்!
பிரபல நடிகை பூனம் பாஜ்வாவுக்கு 7ம் வகுப்பு மாணவனொருவன் அனுப்பிய ப்ரோபோசல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமாவிற்கு அறிமுகம்
நடிகை பூனம் பாஜ்வா தமிழ் சினிமாவில் ஹரி இயக்கத்தில் பரத் நடித்த ‘சேவல்’ என்ற திரைபடத்தின் மூலம் கடந்த 2009 ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து இவர் பல பிரபல நடிகர்களுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, துரோகி, ஆம்பள, ரோமியோ ஜூலியட், முத்தின கத்திரிக்கா, அரண்மனை-2, குப்பத்து ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் கொடிக்கட்டி பறந்தார்.
மேலும் இயற்கையாகவே ரசிகர்களை கவரும் முக அமைப்புக் கொண்ட பூனம் பாஜ்வா நிறைய படங்கள் நடித்தாலும் அவர் நினைத்தளவு திரையுலகில் வரவேற்பு கிடைக்கவில்லை.
ஆனாலும் சினிமாவில் அவருடைய பங்களிப்பு தரும் வகையில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
திருமணம் குறித்து மனம் திறந்த பூனம்
இதனை தொடர்ந்து இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக தான் இருக்கிறார். மேலும் கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடை இன்ஸ்டா, டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் சமிபத்தில் சுமார் 7 ஆம் வகுப்பு மாணவனொருவன் இவரை திருமணம் செய்துக் கொள்வதாக தெரிவித்தாக பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.
அதில் தொடர்ந்து தெரிவிக்கையில்,“எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும். உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு வயது குறைவாக இருப்பதால் , 21 வயதாகும் வரை காத்திருங்க. வயது வித்தியாசம் பிரச்சினையில்லை. ஏனென்றால் இப்போது ட்ரெண்ட் மாறிவிட்டது.
எனது அம்மாவையும் சமதானம் செய்துவிட்டேன். நீங்கள் தொடர்ந்து கிளாமராக நடிக்கலாம்”என தெரிவித்துள்ளார். மேலும் நான் கிளாமரை பெரியதாக நினைக்கவில்லை.
எல்லாம் மனம் தான், சினிமாவில் இது ஒன்றும் பெரிய விடயமில்லையென் கூறியிருக்கிறார்.
இவரின் இந்த கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.