முடி உதிர்வு, பொடுகு தொல்லை பிரச்சினைக்கு ஒரேடியாக முடிவுகட்டும் பொருட்கள்- பலன் நிச்சயம்
பொதுவாக தற்போது இருப்பவர்களில் தலைமுடி உதிர்வு மற்றும் பொடுகு பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இந்த பிரச்சினை ஊட்டச்சத்து குறைபாடு, நோய், ஹார்மோன் பிரச்சினை, மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படலாம்.
வயதானவர்களிலும் பார்க்க இளம் வயதில் இருப்பவர்கள் முடி உதிர்வு மற்றும் பொடுகு பிரச்சினையால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
இதற்கு ஆங்கில மருத்துவத்தை விட வீட்டிலுள்ள சில எளிய பொருட்களை கொண்டு வீட்டு வைத்தியம் செய்தால் நிரந்தர நிவாரணம் பெறலாம்.
அந்த வகையில் தலைமுடி உதிர்வு மற்றும் பொடுகு பிரச்சினை இரண்டிற்கு உடனடி நிவாரணம் தரும் பொருட்கள் என்னென்ன என்பதனை பதிவில் பார்க்கலாம்.
1. தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக உள்ளது. இது தலைமுடி வலுப்படுத்துவதுடன் தலைமுடி உதிர்வை குறைக்கின்றது. முடி உதிர்வு அதிகமாக இருப்பவர்கள் உச்சந்தலை மற்றும் நுனி முடி வரை தேங்காய் எண்ணெயை தடவவும். பின்னர் நன்றாக மசாஜ் செய்து சில மணி நேரங்கள் ஊற வைத்த பின்னர் அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் தலைமுடி உதிர்வு நாளடைவில் குறையும், பொடுகு பிரச்சினையும் கட்டுபாட்டிற்குள் வரும்.
2. கற்றாழை
முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வேதி பொருட்கள் கற்றாழை அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. கற்றாழை ஜெல்லை உச்சந்தலையில் இருந்து நுனி முடி வரை தடவ வேண்டும். இதனை சரியாக 1/2 மணி நேரம் ஊற வைத்து விட்டு ஷாம்பூ போட்டு நன்றாக அலச வேணடும். இப்படி செய்து வந்தால் தலை குளிர்ச்சயடைந்து தலைமுடி உதிர்வு குறையும், பொடுகு பிரச்சினையும் கட்டுக்குள் வரும். ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால் உரிய மருத்தவரை பார்க்கலாம்.
3. வெந்தயம்
சமைலறையில் அதிகம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் வெந்தயம். இதில் புரதங்கள் மற்றும் நிகோடினிக் அமிலம் உள்ளது. இது தலைமுடி உதிர்வை தடுத்து வளர்ச்சியை அதிகப்படுத்தும். வெந்தயத்தை நன்றாக ஊற வைத்து பேஸ்ட்டாக அரைத்து தலைக்கு அப்ளை செய்து கொள்ளவும். பின்னர் ஷாம்பூ போட்டு நன்றாக தலைமுடி அலசவும். இதனால் உடல் சூடு தனிவதோடு முடிக்கு அதிக சக்தி கிடைக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |