உணவில் உப்பு அதிகமாக சேர்த்து சாப்பிடுபவர்களா நீங்கள்? உங்களுக்கான எச்சரிக்கை!
எப்பொழுதும், உப்பு உணவில் அளவோடு சாப்பிடுவதே சிறந்தது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், உப்பில் 40 சதவீதம் சோடியம், 60 சதவீதம் குளோரைடு உள்ளது.
சோடியமும் குளோரைடும் உடலுக்கு தேவையான ஒன்று. இவை மட்டுமில்லாமல் நமது உடலுக்கு இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ், சல்பர், அயோடின், சிலிகான் போன்ற உப்புகளும் அதிக அளவில் தேவைப்படுகின்றன.
இதையடுத்து, உப்பு உடலில் அதிகமாகும்போது என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்றால், உப்பு கூடும்போது கால்சியம் இயல்பாகவே குறையும் என்கிறார்கள்.
இதனால் கண்ணில் புரை நோய் ஏற்படும். மேலும், ஏற்கனவே சர்க்கரை நோய் இருந்தால் புரைநோய் வேகமாக பரவும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீமில் 'சோடியம் அல்கினேட்' என்ற உப்பை கலக்குகிறார்கள்.
இதனால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.
இதனால், உப்பை அளவோடு சாப்பிடுவதே உடல் நலத்துக்கு நல்லது. உப்பு மிக அதிக அளவில் உள்ள உணவுகளை சாப்பிடவேண்டாம் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.