கதறி அழுத தொகுப்பாளினி பிரியங்கா! மா.கா.பா கொடுத்த ஷாக் - அரங்கமே அதிர்ந்த ஒர் தருணம்
பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு பிக் பாஸ் ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் மா.கா.பா ஆனந்த் உள்ளட்ட பிரபலங்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
தொகுப்பாளினியாக பிரியங்கா 10 வருடங்களை நிறைவு செய்துள்ளார். இதனால் பிக் பாஸ் ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாடியதுடன், அவருக்கு நெகிழ்ச்சி பரிசு ஒன்றையும் அவரின் நண்பர்கள் கொடுத்துள்ளனர்.
அதில் தொகுப்பாளினி பிரியங்கா அவருடைய அப்பாவுடன் குடும்பத்துடன் இருப்பது போன்ற புகைப்படம் இருந்ததை பார்த்து நெகிழ்ச்சியில் கதறி அழுதுள்ளார்.

சிறுவயதிலேயே அப்பாவை இழந்து விட்ட பிரியங்காவுக்கு எல்லாமே அம்மா தான் என்பதையும் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.
பிரியங்காவின் சாதனை பயணம்
பிரியங்கா தேஷ்பாண்டே முதன் முதலில் ஒல்லி பெல்லி எனும் நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்கு என்ட்ரி கொடுத்தார்.
இதன்பின் இவர் தொகுப்பாளராகவும், போட்டியாளர்களாக சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்துள்ளார்.
ஆனால், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான், தொகுப்பாளினி பிரியங்காவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது.
Enggal Priyuuu vaalga @Priyanka2804 #priyankadeshpande So much happy for you ❤️❤️stay happy forever Priyu #Bbjodigal Love you more pic.twitter.com/7y6phAONaN
— NARESH M CHANDARAN (@naresh__off_) August 21, 2022
இதன்பின், ஸ்டார்ட் ம்யூசிக், தி வாள், போன்ற பல நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி மக்கள் மனதில் இடத்தை பிடித்துள்ளார்.
தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல், பிக் பாஸ் சீசன் 5வில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தையும் பிடித்தார்.
10 வருடங்களை ரசிகர்களின் செல்லப்பிள்ளையாக கடந்த பிரியங்கா தேஷ்பாண்டேவின் தொகுப்பாளர் பயணம் மேலும் தொடர பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.









