40 வயதிலும் குறையாத இளமை... நடிகை பிரியாமணியின் டயட் என்ன தெரியுமா?
உணவுக்கான விருப்பங்களை முழுமையாக தடுக்காமல், நடிகை பிரியாமணி தனது உடம்பை எவ்வாறு ஸ்லிம்மாக வைத்துள்ளார் என்பதை தெரிந்து கொள்வோம்.
நடிகை பிரியாமணி
தமிழ் சினிமாவில் நடிகையாக வலம்வரும் பிரியாமணி தனது 65 கிலோ எடையினை எவ்வாறு குறைந்ததாக கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் சரும பராமரிப்பில் அதிகமான கவனம் செலுத்தாத இவர், கேமராவில் தனது முகம் தெளிவாக தெரிந்த பின்பு சருமத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
இவர் தண்ணீர் அதிகமாக குடிப்பது, மென்மையான ஃபேஸ் வாஷ், மாய்ஸ்சரைஸர் மற்றும் சன் ஸ்கிரீம் இவற்றினை பயன்படுத்தியுள்ளார்.

தனது விருப்பமான உணவுகளை முழுமையாக தடுக்காமல், அதற்கு மாறாக என்ன செய்யலாம் என்பதை குறித்து பிரியாமணி கூறியுள்ளார்.
உதாரணமாக ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டுமெனில், அதிக கலோரி மற்றும் சர்க்கரை உள்ளதைத் தவிர்த்து, குறைவான கலோரி கொண்ட ஆரோக்கியமான ஐஸ்கிரீமை சாப்பிடுவாராம்.
பெண்கள் தங்களது வலிமைக்கான பயிற்சிகளையும், எடைதூக்கும் பயிற்சியினை செய்ய வேண்டும் என்றும் ஜிம் மட்டுமின்றி யோகாவும் செய்கின்றார்.

அன்றாட உணவுமுறை
காலையில் எழுந்த உடன் நெல்லிக்காய் 3, உலர் பழங்கள் மற்றும் ஆயுர்வேத பானமான காதாவை பருகுகின்றார்.
காலை உணவாக Muesli (ஓட்ஸ், பழங்கள், விதைகள்) இவற்றினை வாரத்தில் மூன்று நாட்கள் எடுத்துக் கொள்கின்றார். மற்ற நாட்களில் தோசை, இட்லி, உப்மா எடுத்துக் கொள்கின்றார்
மதிய உணவாக புரதம் நிறைந்த ரொட்டி தால், சாலட், வேர்க்கடலை கிச்சடி, கவுனி அரிசி சாதம், குழம்பு இவற்றினை உணவாக எடுத்துக் கொள்கின்றார்.

மாலை 6.45 மணிக்கு இரவு உணவாக தோசை அல்லது ரவா தோசை, பரோட்டா இவற்றினை எடுத்துக் கொள்கின்றாம். இரவு படுக்கும் முன்பு இலவங்கப்பட்டை தண்ணீரை குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
மயோனெய்ஸ் இல்லாத பர்கர் அவ்வப்போது எடுத்துக் கொள்கின்றார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |