சாணக்கிய நீதி: இந்த 3 இடங்களில் இருப்பது உயிருக்கே ஆபத்தாம்... எச்சரிக்கும் சாணக்கியர்
உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற ஒரு தத்துவ நூலாக சாணக்கிய நீதி திகழ்கின்றது. இந்த நூல் ஆச்சாரியா சாணக்கியரின் கொள்கைகளையும் தத்துவங்களையும் உள்ளடக்கியே தொகுக்கப்பட்டுள்ளது.
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரியா சாணக்கியர்.
இவரின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. சாணக்கிய நீதியை பின்பற்றியவர்கள் இன்றும் பின்பற்றுபவர்கள் என ஏராளம் பேர் இருக்கின்றனர். வாழ்வில் வெற்றியடைந்த பலபேருக்கு இது ஒரு சிறந்த வழிக்காட்டியாக இருந்துள்ளது.
அந்த வகையில் சாணக்கியரின் கருத்துக்களின் பிரகாரம் குறிப்பிட்ட சில சூழலில் இருப்பது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என குறிப்பிடப்படுகின்றார்.அப்படி தவிர்க்க வேண்டிய சூழல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தவிர்க்க வேண்டிய சூழல்
சாணக்கிய நீதியின் அடிப்படையில் வன்முறை அல்லது கலவரம் நிறைந்த சூழலில் இருந்து உடனடியாக வெளியேறிவிட வேண்டும் என்கின்றார்.
புத்திசாலிகள் எப்போதும் இத்தகைய இடங்களில் வசிப்பதை விரும்புவது கிடையாது. வன்முறை நிறைந்த இடங்கள் எப்போதும் பாதுகாப்பை கொடுக்காது.
நம்மை சார்ந்தவர்கள் வன்முறையில் ஈடுப்பட்டாலும் இது நமக்கும் சாதக பலனை கொடுப்பது கிடையாது. அறிவாளிகள் இதை புரிந்துக்கொள்வார்கள் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
துளியும் தாமதிக்காமல் அங்கிருந்து வன்முறைகள் நிகழும் இடத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் சாணக்கிய நீதி எச்சரிக்கின்றது.
சாணக்கிய நீதியின் பிரகாரம் நிராயுதபாணியாக நிற்கும் சமயத்தில் யாரையும் எதிர்கொள்ளத் தயாராகுவது மிகப்பெரும் முட்டாள்தனம்.
அந்த சூழலில் வீரத்திற்கும், சுயமரியாதைக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை விடவும் அங்கிருந்து வெளியேறுவதே சிறந்த முடிவாக இருக்கும் என்கின்றார் சாணக்கியர்.
சாணக்கியரின் கருத்துப்படி உணவுக்கு தட்டுப்பாடு இருக்கும் இடத்தை விட்டு தாமதிக்காமல் வெளியேற வேண்டும் என்கின்றார்.
உணவு கிடைக்காத இடத்திலோ, உணவு பற்றாக்குறை உள்ள இடத்திலோ நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியாது. இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
மேலும் குற்றவாளிகள் இருக்கும் இடத்தில் ஒரு போதும் வசிக்க கூடாது என சாணக்கியர் எச்சரிக்கின்றார். இது உங்களை கெட்ட வழிக்கு இட்டுச்செல்லும் அல்லது உயிராபத்தை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |