பிக் பாஸில் இந்த வாரம் Double Eviction குறைவான வாக்குகளுடன் வெளியேறப்போவது யார்?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறவுள்ளனர். அந்த வகையில் எந்த போட்டியாளர்களுக்கு குறைவான வாக்குகள் இருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பிக் பாஸ் குறைவான வாக்குகள்
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 வது நாளை கடந்து செல்கிறது. பல வாரங்களின் டாஸ்குகளை முடித்து தற்போது ஒன்பதாவது வாரம் நடந்துகொண்டு வருகிறது. இதில் போட்டியாளர் ஜெஃப்ரி தலைவர் பதவியை ஏற்றுள்ளார்.
முதலில் ஆண்கள் பெண்கள் என பிரிக்கப்பட்டு விளையாட்டுக்கள் நடைபெற்றன இது சுவாரஸ்யம் இல்லாததால் வீட்டிற்கு நடுவே இருந்த கோடு நீக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை ஏதாவது ஒரு காரணத்தின் பெயரில் நோமினேஷன் செய்வார்கள்.
இதனடிப்படையில் நோமினேஷன் செய்யப்பட்டவர்களில் யார் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார்களோ அவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். இப்போது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் உள்ளனர்.
முதல் மூன்று இடத்தில் முத்துக்குமரன், சௌந்தர்யா, ரானவ் உள்ளனர். ஆனந்தி, ரஞ்சித், சாச்சனா என்பவர்கள் குறைவான வாக்குகளை பெற்று கடைசி இடத்தில் உள்ளனர்.
இதில் சாச்சனா, ஆனந்தி குறைவான வாக்குகளை பெற்றிருந்தாலும் ரஞ்சித் கன்டன்ட் குறைவாக கொடுப்பதால் இவரும் இன்னுமொரு பெண் போட்டியாளரும் வெளியேற வாய்ப்பு உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |