இங்கிலாந்து ஹரி- மேகன் தம்பதிக்கு இரண்டாவது பெண்குழந்தை- பெயர் என்ன தெரியுமா?
இங்கிலாந்து இளவரசர் ஹாரியும் முன்னாள் அமெரிக்க நடிகையுமான மேகனும் காதலித்து அரச குடும்பத்தின் ஒப்புதலோடு திருமணம் செய்துக்கொண்டனர்.
ஆனால், அரசு குடும்பத்துடன் ஏற்பட்ட சில மனஸ்தாபங்கள் காரணமாக அரச உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகி கலிபோர்னியாவில் வசித்து வருகின்றனர்.
இதையடுத்து, ஏற்கனவே இந்த தம்பதிக்கு கடந்த 2019-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு எலிசபெத் ராணியின் (ஆர்ச்சி ஹாரிசன் மவுன்ட்பேட்டன்-வின்ட்சர்) பெயரை சூட்டியிருந்தது.
இதனிடையே, கடந்த 4-ந்தேதி இந்த தம்பதிக்கு கலிபோர்னியாவில் மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு ஹாரி, மறைந்த தனது தாயார் டயானாவின் (லிலிபெட் லிலி டயானா) பெயரை சூட்டியுள்ளார்.