குக்கரில் சாதம் சமைத்து சாப்பிட்டால் உடல்நலத்திற்கு தீங்கா? அதிர்ச்சி தகவல்
காய்கறிகள், உருளை, சேப்பங்கிழங்கு மாதிரி வேர்கறிகள் மட்டும் இல்லாமல் இப்போது சாதம் வைப்பதற்கும் பெரும்பாலும் குக்கர்தான் பயன்படுகிறது.
முன்னாடி போல பாத்திரத்தில் தண்ணீர் காய்ச்சி, அரிசி போட்டு, உப்பும் சேர்த்து வெந்து வரச் சுமார் 30 நிமிடம் எடுத்துக்கொண்டிருந்த நேரம் போயிற்று. இப்போ குக்கரில் தேவையான தண்ணீரை ஊற்றி 2-3 விசில் விட்டா, பத்து நிமிஷத்தில் சூப்பரா சாதம் ரெடி!
நேரம் சேமிக்கிறது, வேலை எளிமையாகிறது இதுவரை அனைத்தும் சரிதான். ஆனா, உடல்நலத்திற்கு இது நம்மை எந்த பக்கம் அழைத்துச் செல்லும்? என்பதுதான் முக்கியமான கேள்வி.
ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, குக்கரில் வேகவைக்கப்படும் அரிசியில் ஸ்டார்ச் அதிகம் தேங்குவதால், அதனைச் சாப்பிடும் போது நம்முடைய உடலில் கார்போஹைட்ரேட் அளவு அதிகரிக்கிறது. இதன் விளைவாக:
உடல் எடை உயர வாய்ப்பு
நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள்
இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்
இவை அனைத்தும் மெல்ல மெல்ல நம்மை பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இன்றைய நவீன வாழ்க்கை உடல் உழைப்புக்கு வாய்ப்பு இல்லாததாலும், நாம் எடுக்கும் உணவின் வகை மிகவும் முக்கியமானதாகிவிட்டது. அதனால் ஒவ்வொரு நாளும் குக்கரில் சாதம் செய்வதை தவிர்க்கலாம். அவசரமான நேரங்களில் மட்டும் பயன்படுத்துவது சிறந்தது.
அதற்கு பதிலாக, பழைய முறையை பின்பற்றுவது நலமே. அதிக தண்ணீரில் அரிசியை வேக வைத்து, அதில் உள்ள ஸ்டார்ச் நீரை வடிகட்டி எடுத்தால், சுவையும், சுகமும் இரண்டும் ஒரே நேரத்தில் கிடைக்கும்.
அதே போல காய்கறிகளையும் வேகும்போது தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு வேகவைக்க வேண்டும். அதிக தண்ணீரில் காய்ச்சி அதை இழந்துவிட்டால், அந்த தண்ணீரோடு சத்துகளும் போய்விடும். ஆனால் அந்த வடிகட்டிய தண்ணீரை மிளகு தூள், உப்பு போட்டு குடித்துவிட்டால், காய்கறியில் இருந்த சத்துகளும் வீணாகாமல் நம்முக்கே பயனளிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |