பற்களைப் பாதுகாக்க பாட்டி வைத்தியம் தெரியுமா? இனி கஷ்டப்படவே மாட்டீங்க
நமது முக அழகைப் பாதுகாப்பதில் பற்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆனால் அவ்வாறு காணப்படும் பற்களுக்கு நாம் அதிகமான முக்கியத்துவம் கொடுத்திருக்க மாட்டோம்.
பற்களில் சிதைவு, பற்கள் அரிப்பு இவை பெரும்பாலான நபர்களிடம் காணப்படும் பிரச்சியாக இருக்கின்றது. இவ்வாறான பிரச்சினையை தீர்க்க கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பால், தயிர் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றையும் முட்டை, மீன், இறைச்சி, நட்ஸ், விட்டமின் சி சத்துக்கள் கிடைக்கக் கூடிய உணவுகளை முறையாக சாப்பிட வேண்டும்.
பற்களை பாதுகாக்க என்ன செய்யலாம்?
இரும்புச் சத்து நிறைந்த நெல்லிக்காயில் அதிகமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் காணப்படுகின்றது. ஒரு தேக்கரண்டி நெல்லிக்காத்தூளுடன், 2 தேக்கரண்டு தண்ணீர் கலந்து பேஸ்ட் போன்று கலந்து கொண்டு, பற்களில் தேய்த்து மசாஜ் செய்தால் பற்கள் இறுக்கமாகும்.
வாயின் துர்நாற்றத்தையும், பாக்டீரியாவையும் அகற்குவதற்கு தேன், கடுகு எண்ணெய் உதவுகின்றது. 1 தேக்கரண்டி கடுகு எண்ணெய் மற்றும் 1/2 தேக்கரண்டி தேனை சேர்த்து பசை போன்று எடுத்து, பற்களில் மசாஜ் செய்து, ஒரு மணிநேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் வாயை கழுவினால் பற்களின் இடைவெளி குறைந்து வலுவாகும்.
பற்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு பூண்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டி பற்களின் இடையே வைத்தால் போதும்.
சொத்தை பற்களால், வலி ஏற்படும் போது மஞ்சள் தூளுடன், கல் உப்பை நொறுக்கி சேர்த்து, மெதுவாக மசாஜ் செய்தால் வலி குணமாகும். அவ்வாறு பற்களில் வலி குறைந்து உப்பின் உணர்வு உங்களுக்கு தெரிந்த பின்பு மிதமான சூடு தண்ணீரில் வாயை கொப்புளித்து விடவும்.