அதிர்ஷ்டமான இரட்டை குழந்தைகளுடன் போட்டியை ரசித்த ப்ரீத்தி ஜிந்தா - இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்
ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தா (Preity Zinta) கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த தன் நீண்ட கால நண்பரான ஜீன் குட் இனாஃப் என்பவரை லாஸ் ஏஞ்சல்ஸில் திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து, அண்மையில் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தார். அந்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகின.
இந்நிலையில், நேற்று நடைப்பெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியும் மோதின.
இதில், 200 ரன்களை கடந்து 19 ஓவரில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றியை பெற்றது. இதற்கு பல ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில், நடிகை ப்ரீத்தி ஜிந்தாவும் வாழ்த்தை கூறியுள்ளார்.
பல நன்மைகளை தரும் ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பது எப்படி?

குவியும் இரட்டை குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்
அதன்படி, இணையத்தில் தனது இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தை காட்டியவாறு, பஞ்சாப் அணி வெற்றி பெற்றதையும் புகைப்படமாக எடுத்துவெளியிட்டு, புதிய அணி, புதிய கேப்டன், புதிய ரசிகர்கள், நன்றி. அருமையான ரன் சேஷிங் என பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதற்கு நெட்டிசன்கள் பலரும் இரட்டை குழந்தையின் அதிர்ஷ்டத்தால், இந்த வெற்றி முதலில் கிடைத்துவிட்டது.
நீங்கள் அதிர்ஷ்ட சாலி என பல பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். இணையத்தில் இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
இரட்டை குழந்தை பலரும் ரசித்து, ஜெய், கியாவுக்கு வாழ்த்துக்கள் என ஷேர் செய்து வருகின்றனர்.
New team, new Captain and new fans ? Thank you @PunjabKingsIPL for such a fantastic run chase and for making Jai & Gia’s first IPL game so memorable ?? I cannot stop smiling. #Ting #Tataipl #ipl2022 #saddapunjab #aapajeetgaye ❤️ pic.twitter.com/vvIyMqv2Hq
— Preity G Zinta (@realpreityzinta) March 27, 2022