கோடை காலம் வந்தாச்சு! கர்ப்பிணிகளை பாதுகாக்கும் 5 உணவுகள்... என்னென்ன தெரியுமா?
பொதுவாக பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது சில உணவுகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருப்பார்கள்.
அந்த வகையில் கோடைக்காலம் மனிதர்களை விட கர்ப்பிணியாக இருக்கும் பெண்களை தான் அதிகம் பாதிக்கின்றது.
மேலும் கோடைக்காலங்களில் உடல் சூடு அதிகரிக்கும் இவ்வாறு அதிகரிக்கும் போது தலைவலி, நீர்ப்போக்கு மற்றும் வயிற்றுப் போக்கு ஆகிய பிரச்சினைகள் ஏற்படும்.
இது போல் எந்த பிரச்சினையும் அவர்களுக்கு ஏற்படாமல் தடுப்பதற்காக தான் மருத்துவர்கள் குறிப்பிட்ட சில உணவுகளை அடிக்கடி எடுத்து கொள்ள வேண்டும் எனக் கூறுவார்கள்.
இதன்படி கர்ப்பிணி பெண்கள் கோடை காலத்தில் எடுத்து கொள்ள வேண்டிய ஐந்து வகை உணவுகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்
1. தர்பூசணி
கோடைக்காலம் வந்து விட்டாலே தர்பூசணிக்கு பஞ்சம் ஏற்பட்டு அந்தளவு பிரபலமான பழம். இந்த பழத்தில் சுமார் 92 சதவீதம் தண்ணீரும் கனிமங்களும் தான் காணப்படுகின்றன.
மேலும் உடலுக்கு தேவையான வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகிய ஊட்டசத்துக்கள் ஏராளமாக இருக்கின்றன. இதனால் கோடைக்காலங்கள் கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் தாராளமாக எடுத்து கொள்ளலாம்.
2. மாம்பழம்
பொதுவாக வீடுகளில் அடிக்கடி இருக்கும் பழங்களில் முக்கிய இடத்தை மாம்பழம் தான் பிடிக்கின்றது. இந்த பழம் மற்றைய பழங்களை விட அதிகமான சுவையில் இருக்கும்.
மாம்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அதிகம் இருப்பதால்கருவுற்ற குழந்தையின் கண் ஆரோக்கியத்தை பாதுக்காக்க உதவுகின்றது. மேலும் நார்ச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றது. இது மலச்சிக்கல் பிரச்சினை தடுத்து நல்ல தீர்வு கிடைக்கின்றது.
3. தக்காளி
கோடை காலம் என்றாலே கர்ப்பிணிகள் தவறாமல் காய்கறி மற்றும் தக்காளி அதிகமாக சாப்பிட வேண்டும்.
தக்காளியில் லைகோபீன் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட் இருக்கின்றது. இது புற்றுநோய் வராமல் தடுக்கும். மேலும் வைட்டமின் சி இருக்கின்றது, இதனால் இரத்தயோட்டம் சீராக இருக்கும்.
4. தயிர்
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அதிகளவு தயிர் சாப்பிட்டால் வந்தால் குழந்தைகளின் பற்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.
பெருகோவில் புரோபயாடிக்குகள் எனப்படும் சத்துக்கள் நிறைந்துள்ளன. இது செரிமான அமைப்புக்கு உதவுகின்றது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்துகிறது.
5. கீரைகள்
கீரைகள் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சக்தியே கிடைக்கின்றது என கேள்வி பட்டிருப்போம். அந்த வகையில் கீரையில் ஃபோலேட், இரும்பு மற்றும் வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றன.
இது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகின்றது. மேலும் கீரையை கறிகள், சாலடுகள் அல்லது பரோட்டாக்கள் போன்ற வடிவங்களில் சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடும் போது மலச்சிக்கல், செரிமானம் ஆகியவற்றில் எந்த விதமான பிரச்சினையும் இருக்காது.