விஜய் வீட்டு வாசலில் அழுத கர்பிணி பெண் - படு வைரலாகும் காணொளி
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் நீலாங்கரை வீட்டின் வாசலில் கர்பிணி பெண் ஒருவர் அழுத காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கண்ணீர் விட்டு அழுத கர்பிணி பெண்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறி உள்ளது.
எனினும் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சி ஆதரவு வழங்கியதை அடுத்து, தங்களிடம் 113 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக தமிழக வெற்றிக்கழகம் ஆளுநரிடம் பட்டியலை வழங்கிய பின்னரும் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நேர்ந்துள்ளது.
இந்த நிலையில் விஜய் ஆட்சி அமைப்பதில் மக்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

வைரல் காணொளி
இந்நிலையில், பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியை சேர்ந்த எட்டு மாத கர்ப்பிணி பெண் வினோதினி விஜய்யின் வீட்டிற்கு வந்து வாசலில் உட்காந்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
அவர் அழுத காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அவர் அந்த காணொளியில் “நான் சிறுவயதிலிருந்தே விஜயின் தீவிர ரசிகை, அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.
துள்ளாத மனமும் துள்ளும் படம் பார்த்த பிறகு அவரின் தீவிர ரசிகையாகிவிட்டேன். விஜய் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக அவருக்கே வாக்களித்தேன்.

தேர்தலில் வென்ற பிறகும் அவர் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக கோயில்களில் சீட்டு எழுதி பிரார்த்தனை செய்தேன். மேலும் அவர் முதல்வர் ஆகிவிட்டதால் அவருக்கு கொடுப்பதற்காக கீ செயின் வாங்கினேன்.
நான் எழுதிய இந்த கடிதங்களை விஜய் அண்ணாவின் கையில் கொடுத்தால் போதும்
தொடர்ந்து பேசிய அந்த பெண்... வீட்டில் இருப்பவர்கள் என்னை மனநலம் பாதிக்கப்பட்டவள் என்று கூறுகிறார்கள். என் கணவர் வீட்டின் பக்கத்தில் இருக்கும் பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார்.

இதனால் நான் மனவேதனையில் இருக்கிறேன். என்னால் சரியாக தூங்க முடியவில்லை, சாப்பிட முடியவில்லை, எப்போதும் இதையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
தூக்க மாத்திரை சாப்பிட்டாலும் எனக்கு தூக்கம் வரவில்லை. இந்த கடிதத்தை பார்த்தவுடன் என் கணவரை அழைத்து அவரை சிறையில் அடைக்க வேண்டும்.
அதேபோல, என்னை பத்திரமாக வீட்டில் விட்டு விட்டு அவர்களிடம் இருப்பவர்கள் என்னை நன்றாக பார்த்துக் கொள்ளும்படி நீங்கள் சொல்ல வேண்டும் என கண்ணீருடன் மனமுருக பேசி உள்ளார். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |