இந்த அறிகுறிகள் இருந்தா நீங்க கர்ப்பமா இருக்கீங்கன்னு அர்த்தமாம்!

pregnancy pregnancy symptoms pregnancy woman
By Manchu Apr 10, 2022 10:52 AM GMT
Report

பெண்கள் முழுமையடைவது தாபெண்கள் முழுமையடைவது தாய்மையில் தான். தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் முக்கியமான கால கட்டம் என்றே சொல்லலாம். ய்மையில் தான். தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் முக்கியமான கால கட்டம் என்றே சொல்லலாம்.  

உலகில் புதிய உயிரை கொண்டு வரும் உன்னத பேறை பெறுகிறாள் பெண் என்பவள். அத்தகைய சிறப்பு மிக்க கர்ப்ப காலத்தில் பெண் மனதளவிலும் உடல் அளவிலும் பல்வேறு மாற்றங்களைப் பெறுகிறாள்.

இதைதான் பேறுகாலம், கர்ப்ப காலம்,மகப்பேறு காலம், பிரசவக் காலம் என்று பல பெயர்களில் அழைக்கிறோம்.

இளம் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என்று அறிவுரை கூறுவதற்கு கூட பெரியவர்கள் அருகில் இல்லாத நிலை தான் இன்று உள்ளது. உணவுகளில் அதிகம் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் எந்த உணவு உண்டாலும் அது குழந்தையை சென்றடையும்.

இந்த அறிகுறிகள் இருந்தா நீங்க கர்ப்பமா இருக்கீங்கன்னு அர்த்தமாம்! | Pregnancy Symptoms In Tamil

பிக்பாஸ் அல்டிமேட்டின் Grand Finale! தெறிக்கவிட்ட சிம்பு 

கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன?

மாதவிடாய் தள்ளி போவது:

ஒரு பெண்ணுக்கு ஒழுங்கான முறையில் மாதவிடாய் வந்திருந்தாலும், ஒழுங்கற்ற முறையில் வந்திருந்தாலும் கர்ப்பமாக இருக்கும்போது கண்டிப்பாக நின்றுவிடும். இது தான் ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதற்கான முதல் அறிகுறி.  

மார்பகம் வீங்குதல்:

ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் மார்பகம் மென்மை அடைந்து வீங்கி காணப்படுகிறது. இது அசவுகரியமான உணர்வை தந்தாலும், சில வாரங்களில் சரியாகிவிடும்.

குமட்டல்:

இது பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவுகரியத்தை தரும் ஒன்றாகும். ஒரு சில கர்ப்பிணிகளுக்கு வாந்தியுடன் கூடிய குமட்டல் உணர்வும் இருக்கும். இருப்பினும், 14 வாரங்களில் இப்பிரச்சனை குறையக்கூடும். ஒரு சிலருக்கு இறுதி வரையும் கூட இப்பிரச்சனை இருக்கவும் செய்கிறது.

சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு:

வழக்கத்திற்கு மாறாக சிறுநீர் கழிக்க வேண்டிய எண்ணம் வரும். நம்முடைய உடலில் உள்ள இரத்தமானது கர்ப்பமாக இருக்கும்போது அதிகரிக்க செய்கிறது. இதனால், சிறுநீர்ப்பையில் கூடுதல் திரவம் சுரந்து சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது.

உடல் சோர்வு:

உடல் சோர்வும் இந்த நேரத்தில் அதிகமாக இருக்கும். எனவே கர்ப்பிணிகள் அதிகம் தண்ணீர் குடிப்பதை உறுதிசெய்ய வேண்டும். இந்த சமயம் அதிகம் ஓய்வில் இருக்க வேண்டுமென்ற எண்ணம் நமக்கு வரும்.

இந்த அறிகுறிகள் இருந்தா நீங்க கர்ப்பமா இருக்கீங்கன்னு அர்த்தமாம்! | Pregnancy Symptoms In Tamil

எடையை குறைச்சா போனஸ்! சூப்பர் டாஸ்க் கொடுத்த நிறுவனம்… ஏன் தெரியுமா? 

கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய காரியம்

கர்ப்பிணிகள் அதிகளவு கால்சியம் சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும், பாலில் கால்சியம் நிறைந்துள்ளது, குறிப்பாக கொழுப்பு நீக்கப்பட்ட பாலை பருக வேண்டும்.

பருப்பு, பீன்ஸ், பயறு வகை உணவுகள், இரும்புசத்து மிக்க உணவுகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் தண்ணீர் அதிகமாக பருக வேண்டியிருக்கும்.  

கருவில் இருக்கும் குழந்தையுடன் தாய் பேச வேண்டும், அப்படி பேசுவதால் குழந்தை அமைதியுடன், தாயின் குரலைக் கேட்டுக் கொண்டு நிம்மதியாக இருக்கும்.

கர்ப்பமாக இருக்கும் பெண் பாட்டு கேட்டால் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் கருவில் இருக்கும் குழந்தைக்கு மென்மையான பாட்டுக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். 

இந்த அறிகுறிகள் இருந்தா நீங்க கர்ப்பமா இருக்கீங்கன்னு அர்த்தமாம்! | Pregnancy Symptoms In Tamil

செய்யக்கூடாத விடயம் என்ன?

கர்ப்பிணிகள் டீ, காபி பருகுவதை தவிர்க்க வேண்டும். அதிலும் அதிகமாக காபி குடித்து வந்தால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. குழந்தை எடை குறைவாகவும் பிறக்கக்கூடும்.

அதேவேளையில் கர்ப்பிணி பெண்கள் கிரீன் டீ பருகுவதை அறவே தவிர்த்து விட வேண்டும். அதில் காபின் அளவு அதிகம்.  

கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதத்திற்குப்பின் பெண் சம்மதித்தால் உடலுறவில் ஈடுபடலாம், அதில் தவறு ஏதும் இல்லை, ஆனால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

சிலருக்கு கர்ப்பப்பை பலவீனமாக இருப்பதாகவும், சிலர் படுத்த நிலையிலேயே கர்ப்ப காலத்தைக் கழிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருக்க கூடும். எனவே மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. 

இந்த அறிகுறிகள் இருந்தா நீங்க கர்ப்பமா இருக்கீங்கன்னு அர்த்தமாம்! | Pregnancy Symptoms In Tamil

வாந்தியை கட்டுப்படுத்த சில வீட்டு வைத்தியம்

இஞ்சி டீ

இயற்கையாக வாந்தியை கட்டுப்படுத்துவதில் இஞ்சி சிறந்தது. இஞ்சி டீ குடிக்கலாம். தண்ணீரில் இஞ்சியை கொதிக்க வைத்து சிறிது தேன் கலந்து அருந்தலாம். இஞ்சி மிட்டாய் சாப்பிடலாம்.

எலுமிச்சை பழம்

எலுமிச்சை பழச்சாரும் வாந்தியை கட்டுப்படுத்த உதவும். ஒரு நாள் முழுவதும் மிதமான சூடான தண்ணீரில் எழுமிச்சை பழச்சாறும், சிறிது கல் உப்பும் கலந்து வைத்து கொண்டு அருந்தலாம். எலுமிச்சை சாதம் சாப்பிடலாம். நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் கலந்த லெமன் டீ குடிக்கலாம்.

தண்ணீர்

தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வாந்தி எடுக்கும் போது உண்டாகும் உடல் நீர் வறட்சியை மற்றும் மலச்சிக்கலை போக்க தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். ஒவ்வொரு முறை வாந்தி எடுத்த பின்னும் மிதமான சூட்டில் தண்ணீர் குடிப்பது நல்லது.

இளநீர்

மற்றும் மோர் காலை உணவுக்குப் பிறகு 11 மணியளவில் இளநீர், மோர் குடிக்கலாம். உடல் நீர் வறட்சியை போக்கும் சிறந்த ஆகாரங்கள் இது.

பெருஞ்சீரகம்

வாந்தி உணர்வு ஏற்படும் போது தண்ணீரில் சிறிது பெருஞ்சீரம் சேர்த்து கொதிக்க வைத்து தேன் கலந்து அல்லது எதுவும் கலக்காமலும் சாப்பிடலாம்.

பட்டை

பட்டை அல்லது கிராம்பு பட்டை அல்லது கிராம்பு இவற்றினை தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடிக்கலாம்.

இந்த அறிகுறிகள் இருந்தா நீங்க கர்ப்பமா இருக்கீங்கன்னு அர்த்தமாம்! | Pregnancy Symptoms In Tamil

மகளை திருமணம் செய்ய கேட்ட நபர்! பிக்பாஸ் அர்ச்சனா அதிரடி பதில் 

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கர்ப்ப கால நீரிழிவு

கர்ப்ப கால நீரிழிவானது கர்ப்பம் தரித்து ஐந்து மாதங்களுக்குப் பிற்பட்ட காலத்திலே ஏற்படும்.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் முதல் மூன்று மாதத்திற்கு சர்க்கரையின் அளவினை சோதித்து கொள்ள வேண்டும்.

ஆரம்பகாலத்தில் நீரழிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் அது கர்ப்பகால நீரழிவு இல்லை. இது நாள்பட்ட நீரிழிவு என்றே அர்த்தம்.

கர்ப்ப காலத்தில் நீரிழிவு தாக்கம் என்பது 5 மற்றும் 6வது மாதத்தில் சர்க்கரை அளவை சோதனை செய்யும் நீரிழிவு தாக்கம் இருந்தால் மட்டுமே கர்ப்ப கால நீரிழிவு என்று அர்த்தம்.

கர்ப்பகால நீரழிவு ஏற்பட்ட தாயின் குழந்தைகளுக்கு அவ்வளவாக சுகவீனம் ஏற்படுவதில்லை. மாறாக சர்க்கரையின் அளவு அளவிற்கு அதிகமாக இருந்தால், குழந்தை பிறக்கும் போது பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

நீரழிவு நோயுள்ள கர்ப்பிணிகளுக்கு ஆரம்பத்தில் குறிப்பிடப்படிருக்கும் தேதிக்கு இரண்டு வாரத்திற்கு முன்பே பிரசவிக்கப்படுகின்றது. ஏனெனில் நீரிழிவு நோய் உள்ள கர்ப்பிணியால் வயிற்றில் உள்ள குழந்தையின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம்.   

இந்த அறிகுறிகள் இருந்தா நீங்க கர்ப்பமா இருக்கீங்கன்னு அர்த்தமாம்! | Pregnancy Symptoms In Tamil

கர்ப்ப கால ஆரம்பத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

பப்பாளி மற்றும் அன்னாசி

கர்ப்ப காலத்தில் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். ஆனால் ஒருசில பழங்களை தொடவே கூடாது. அதில் பப்பாளி மற்றும் அன்னாசி கருவிற்கு ஆபத்தை விளைவிக்கும் பழங்கள் ஆகும்.  

மீன்

மீன்களில் அதிக அளவில் மெர்குரி இருப்பதால், அதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. குறிப்பாக ஸ்வார்டுபிஷ், சுறா மற்றும் ராஜா கானாங்கெளுத்தி போன்றவைகளை சாப்பிடவே கூடாது. வேண்டுமானால் சால்மன் மீன் சாப்பிடலாம். ஆனால் அதுவும் மாதத்திற்கு ஒரு முறை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும்.

இறைச்சி

இறைச்சிகளை சாப்பிடும் போது பாதியாக வேக வைத்து சாப்பிடக்கூடாது. இதனால் இறைச்சியில் உள்ள கிருமியானது சிசுவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இறைச்சியை நன்கு மென்மையாக வேக வைத்து சாப்பிட வேண்டும். மேலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை தொடவே கூடாது.

பச்சை பால் மற்றும் முட்டை 

பாலில் புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் பாலை அதிகம் குடிப்பார்கள். ஆனால் எக்காரணம் கொண்டும் பாலை பச்சையாக குடிக்கக்கூடாது.கர்ப்பிணிகள் முட்டையை பச்சையாகவோ அல்லது பாதியாக வேக வைத்ததையோ சாப்பிடாமல், நன்கு வேக வைத்த முட்டையை தான் சாப்பிட வேண்டும்.  

காப்ஃபைன் உள்ள பொருட்கள்

காப்ஃபைன் உள்ள பொருட்களை, கர்ப்பத்தின் ஆரம்பத்தில் தவிர்க்க வேண்டும். மேலும் கர்ப்ப காலம் முழுவதும் அளவாகத் தான் காப்ஃபைன் உள்ள பொருட்களான டீ, காபி, சாக்லெட், குளிர் பானங்கள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.

ஆல்கஹால்

எக்காரணம் கொண்டும் ஆல்கஹால் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் சுவைத்துக் கூட பார்த்துவிட வேண்டாம். இதனால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, சில சமயங்களில் கருச்சிதைவையும் ஏற்படுத்திவிடும்.  

இந்த அறிகுறிகள் இருந்தா நீங்க கர்ப்பமா இருக்கீங்கன்னு அர்த்தமாம்! | Pregnancy Symptoms In Tamil

கர்ப்பிணிகள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை

  • முதல் மூன்று மாதங்களில் உடலையும் மனதையும் தேவை இல்லாமல் வருத்திக் கொள்ளக்கூடாது.
  • வாந்தி வருவதைத் தவிர்க்க அடிக்கடி சிறிய இடைவெளிகளில் சாப்பிட வேண்டும்.
  • தொற்று நோய்த் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
  • தொலை தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
  • மிகவும் சோர்வு ஏற்படுத்தக்கூடிய வேலைகளைச் செய்ய வேண்டாம்.
  • தாயின் கவனம் முழுக்க கருவில் வளரும் தன் குழந்தையின் மீது இருப்பது நலம்.
  • இரவுப் பணி செய்பவர்கள், பணி நேரத்தை அவர்களுக்குத் தக்கபடி மாற்றிக் கொள்வது நலம். முதல் மூன்று மாதங்கள் மிக முக்கியமானவை. இந்த நேரத்தில் எல்லாவிதத்திலும் விழிப்பு உணர்வுடனும், பாதுகாப்பு உணர்வுடனும் தாய் இருக்க வேண்டும்.
  • சளி, காய்ச்சல் என ஏதேனும் நோய் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். மகப்பேறுமருத்துவர் அல்லாமல் பொது மருத்துவரிடம் காண்பிக்க நேர்கையில், தான் தாய்மை அடைந்திருப்பதாகச் சொல்ல வேண்டும். அந்தப் பொது மருத்துவர் அதற்கேற்றபடியான மருந்துகளைப் பரிந்துரை செய்வார்.
  • நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்பவர்கள் அவ்வப்போது உட்கார்ந்து ஓய்வு எடுக்க வேண்டும். உடலை வருத்திக்கொள்ளக் கூடாது.
  • முதல் மூன்று மாதத் தாய்மையில் கம்யூட்டர் முன் நீண்ட நேரம் அமர்வது நல்லது அல்ல. சேரில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் அடிக்கடி சிறிது தூரம் நடந்து வர வேண்டும். கனிப்பொறியில் இருந்து வெளிப்படும் கதிர்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது இல்லை.
  • வலியோ, லேசாக ரத்தக் கசிவு அல்லது ரத்தப்போக்கு இருந்தால் உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுகவேண்டும். லேசாகத்தானே இருக்கிறது என்று அலட்சியப்படுத்திவிடக் கூடாது. 

இந்த அறிகுறிகள் இருந்தா நீங்க கர்ப்பமா இருக்கீங்கன்னு அர்த்தமாம்! | Pregnancy Symptoms In Tamil

10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US