சர்க்கரை நோயாளிகள் சுடு நீரில் குளிக்கலாமா? தனியாக குளித்தால் ஆபத்து
குளியல் என்பது நமது அன்றாட வாழ்வில் முக்கியப்பங்கு வகிக்கும் ஒன்று.
அன்றைய நாளை புத்துணச்சியுடன் தொடங்குவதிலிருந்து நாளின் இறுதியில் நமது சோர்வை போக்கும் வரையில் அனைத்திற்கும் குளியல் என்பது முக்கியமானது.
இரவு தூங்கும் முன் குளித்து விட்டு தூங்குவது நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.
மாப்பிள்ளை சம்பா சாதம் சாப்பிட்டால் ஆண்களின் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்!
ஐந்து நிமிடங்கள் குளித்தாலே போதும்!
குளிர் காலத்தில் வெந்நீர் பயபடுத்த எல்லாரும் தயாராக இருந்தாலும் வெந்நீரில் குளிப்பது நல்லதல்ல.
பச்சைத் தண்ணீரில் குளிப்பது தான் நல்லது. காலையில் எழுந்து தினமும் தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் குளித்தாலே போதும்.
அதிலேயே உடல் வெப்பம் குறைந்து, செல்கள் அனைத்தும் பழைய நிலைக்கு திரும்பி ரத்த ஓட்டம் அதிகரித்து உடல் சுறுசுறுப்பாகும்.
நம்முடைய வாழ்விடம் வெப்பமான பகுதி என்பதால் நம் உடலுக்கு தேவையான வெப்பம் தானாகவே கிடைத்திடும். இந்த குளிர்ந்த நீரினால் கிடைக்கும் குளிர்ச்சி கூட ஒரு மணி நேரத்தில் வெப்பமாகிடும்.
தங்கத்தை முதலில் எப்படி பார்த்து வாங்க வேண்டும்? கண்டறியும் முறைகள்
சர்க்கரை நோயாளிகள் சுடு நீரில் குளிக்கலாமா?
சர்க்கரை நோய் முற்றிய நிலையில், சருமத்தின் உணர்வுத்திறன் குறைவாக இருப்பதால் இவர்களுக்கு கொதிக்கும் நீராக இருந்தாலும், சூடு குறைவாகவே தெரியும்.
உடன் இருப்பவர்களின் உதவியுடன் தண்ணீரின் வெப்ப அளவை தெரிந்து கொண்டு குளிப்பது நல்லது.
இல்லையெனில், அதிக சூடான நீரை மேலே ஊற்றிக் கொள்ளும்போது உடலில் ஆங்காங்கே கொப்புளங்கள் ஏற்படும்.