இனி இதற்கு தேவை இருக்காது! இறால் தலையை கொய்யாமல் குழம்பு வைப்பது எப்படி?
பொதுவாக அசைவ உணவு பிரியர்களுக்கு இறால் கொண்டு செய்யப்படும் உணவுகள் மிகவும் பிடிக்கும்.
கடல் வாழ் உயிரினமான இறாலை வைத்து இறால் தொக்கு, இறால் பிரியாணி, இறால்-65 போன்ற பல்வேறு உணவுகளை செய்யலாம். நாம் இறால் சமைக்கும் பொழுது தூக்கி எறியப்படும் தலையை வைத்து அற்புதமான உணவு தயாரிக்கலாம்.
இந்த குழம்பு முழு இறாலை சமைக்கும் பொழுது எவ்வளவு சுவை இருக்கிறதோ அந்தளவிற்கான சுவையை தலை குழம்பும் கொடுக்கிறது.
அந்த வகையில், இறால் தலையை தூக்கி எறியாமல் குழம்பு வைப்பது எப்படி என்பதை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பெரிய இறால்கள் தலைகள் - 10
- சிறிய வெங்காயம்- 5 (மெல்லியதாக நறுக்கியது)
- பச்சை மிளகாய்- 1 (பாதியாக நறுக்கியது)
- தக்காளி- 1 (சிறிய துண்டுகளாக வெட்டியது)
- துருவிய தேங்காய்- ½ கப்
- சீரகம்- 1 தேக்கரண்டி
- மிளகாய்/சிவப்பு மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி
- கொத்தமல்லி தூள்- 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள்- ½ தேக்கரண்டி
- கறிவேப்பிலை- 1 தளிர்
- உப்பு- சுவைக்கேற்ப
- எண்ணெய், கடுகு, சீரகம்- தாளிக்க தேவையான அளவு
- தண்ணீர்- தேவைக்கேற்ப
இறால் குழம்பு எப்படி தயாரிக்கலாம்?
முதலில் குழம்பிற்கு தேவையான அளவு இறாலை எடுத்து நன்றாக சுத்தம் செய்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர், சிறிய வெங்காயம், துருவிய தேங்காய், சீரகம், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள் ஆகிய பொருட்களை மிக்ஸியில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து, ஒரு கடாயை எடுத்து தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு,சீரகம், சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதங்க விடவும். அதில், ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றுவதற்கு முன்னர் பச்சை மிளகாய், தக்காளி துண்டுகளை போட்டு வேக வைக்கவும்.
அதனுடன் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை போட்டு கலந்து கொள்ளவும். கொதிக்க வைக்கும் பொழுது பச்சை வாசணை சென்று விடும். குழம்பு நன்றாக கொதித்த பின்னர் கறிவேப்பிலை, உப்பு சேர்த்து தலையுடன் இருக்கும் இறாலையும் அதனுடன் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
இந்த சுவையான இறால் தலை குழம்பை சூடான சாதத்துடன் பறிமாறினால் நன்றாக இருக்கும். இனி தலையை கட்டாயம் கொய்ய வேண்டிய அவசியம் இல்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |