உடல் சோர்வா இருக்கா? காலையில் இந்த கஞ்சியை 1 கப் குடிங்க
பொதுவாக எல்லோருக்கும் காலையில் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டும் என்று தான் ஆசை இருக்கும். அப்போது தான் எல்லா வேலைகளையும் சரியாகவும் சுறுசுறுப்பாகவும் செய்யலாம்.
அந்த வகையில் நாம் காலையில் எடுத்துக்கொள்ளும் உணவுகளும் அதற்கு சிறப்பான பங்கு வகிக்கின்றன.
காலையில் கொஞ்சம் சோம்பேறித்தனமாக இருக்கிறது என நீங்கள் உணர்ந்தால் இந்த கருப்பு உளுந்து கஞ்சியை செய்து காலையில் ஒரு கப் கடித்து பாருங்க. உங்களுக்கு புத்துணர்ச்சி நன்றாகவே கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
- கருப்பு உளுந்து - 1 கப்
- புழுங்கல் அரிசி - 1 கப்
- தண்ணீர் - 8 கப்
- பூண்டு - 4 பல்
- பெருங்காயத் தூள் -2 சிட்டிகை
- சீரகம் - 1/2 டீஸ்பூன்
- உப்பு - சுவைக்கேற்ப
- மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
- வெந்தயத் தூள் - 1/4 டீஸ்பூன்
- தேங்காய் - 1/2 மூடி
செய்முறை
முதலில் தேங்காயை மிக்சியில் போட்டு, கொஞ்சம் நீரை ஊற்றி நன்கு அரைத்து, அதை வடிகட்டி, பால் மட்டும் எடுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரில் 1 கப் கருப்பு உளுத்தம் பருப்பை எடுத்து, அத்துடன் 1 கப் புழுங்கல் அரிசியை சேர்த்து, நீரில் 2 முறை நன்கு கழுவிக் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் 8 கப் நீரை ஊற்றி , அத்துடன் பூண்டு பற்கள், பெருங்காயத் தூள், சீரகம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
விசில் போனதும் குக்கரைத் திறந்து, கரண்டியால் கஞ்சியை நன்கு மசித்து விட்டு கிளறி விட வேண்டும்.
அடுத்து அதில் மிளகுத் தூள், வெந்தயத் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும். இறுதியாக அதில் தேங்காய் பாலை ஊற்றி கிளறினால், சுவையான கருப்பு உளுந்து கஞ்சி தயார். இதை தினமும் காலையில் குடித்து வந்தால் உடல் புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |