நாவை சுண்டி இழுக்கும் இறால் பால்ஸ்...
கடலுணவுகளில் பெரும்பாலானோருக்கு பிடித்தது இறால். அதன் தனித்துவமான சுவை அனைவருக்கும் பிடிக்கும்.
இனி இந்த இறால் பால்ஸ் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
image - Burswood seafood
தேவையான பொருட்கள்
இறால் - 500 கிராம்
முட்டை - 1
வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
சோள மா - 2 தேக்கரண்டி
சோயா சோஸ் - 1 தேக்கரண்டி
பிஸ்கட் தூள் - 8 தேக்கரண்டி
இஞ்சி, வெள்ளைப்பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - சிறிது
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
image - cafe cat by linda peek
செய்முறை
முதலாவதாக இறாலை நன்றாக சுத்தம் செய்து மஞ்சள், உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊறவிட வேண்டும்.
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி வெள்ளைப்பூண்டு விழுது சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஊறவைத்துள்ள இறாலை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.
வெட்டிய இறாலுடன் சோயா சோஸ், மிளகுத் தூள், உப்பு என்பவற்றை சேர்த்து நன்றாகக் கிளறவும்.
அதன்பின்பு முட்டையை சிறிய பாத்திரத்தில் அடித்து கலக்கி, அதை இறாலுடன் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
கலக்கிய கலவையில் பிஸ்கட் தூள், சோள மா என்பவற்றைச் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
பின்னர் இறால் உருண்டைகளை பிஸ்கட் தூளில் உருட்டி அரை மணித்தியாலம் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
இறுதியாக ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, இறால் உருண்டைகளைப் பொட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
image - Delicious