மீனாவுக்காக இதை செய்தேன்! சினேகாவின் கணவர் உடைத்த அந்த உண்மை
நடிகை மீனாவின் மீது ஒரு காலத்தில் பைத்தியமாக இருந்தேன் என நடிகர் பிரசன்னா கூறிய பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா பயணம் எப்போது ஆரம்பம் தெரியுமா?
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக கலக்கியவர் தான் நடிகை மீனா.
இவருக்கு இன்றும் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என அவரின் ரசிகர்கள் ஏங்கி வருகிறார்கள். மேலும் இவர் “என் ராசாவின் மனசிலே” என்ற படத்தில் தான் நடிகையாக அறிப்பட்டார்.
இதனை தொடர்ந்து கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் ஃபேவரைட் ஹீரோயினாக வலம் வந்தார்.
இந்த நிலையில், நடிகை மீனா தன்னுடைய சினிமாத்துறையை ஆரம்பித்து சுமார் 40 வருடங்கள் ஆன நிலையில் அதற்கு பிரபல ஊடகமொன்று 40 வருட பூர்த்தி நிகழ்வொன்றை நடாத்தியது.
உண்மையை பளாரென உடைத்த பிரசன்னா
அப்போது பல பிரபலங்கள் கலந்து கொண்டு மீனாவை பற்றிய பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். அதில் நடிகர் பிரசன்னா பேசிய விடயங்கள் முழு அரங்கையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அதில், “ நான் நடிகை மீனாவின் மிகப்பெரிய ரசிகன். அவர் ரஜினிகாந்த் தவிர்த்து வேறு யார் நடித்தாலும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.
அவ்வளவு பொசசிவ் எனக்கு. எஜமான் படம் வெளியான போது சென்னையில் டிக்கெட் கிடைக்காததால் ரயிலில் வித் அவுட்டில் பயணம் செய்து கரூருக்கு சென்று பார்த்தேன். அவர் மேல் பைத்தியகாரத்தனமான அன்பு” என ஓபனாக கூறியிருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள்,“ மனைவியின் முன்னாள் இந்த விடயத்தை ஒப்பு கொண்டது பெரிய விடயம் தான்.” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.