44 வயதில் கொள்ளை அழகில் நடிகை மீனா.... வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்க
அண்ணாத்த திரைப்படத்திற்காக மீனா டப்பிங் பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இமான் இசையமைக்கும் இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.
இந்தப் படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
தற்போது அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ரஜினி அண்ணாத்த படத்திற்கான டப்பிங் பணிகள் துவங்கிய நிலையில், மீனாவும் தற்போது டப்பிங் பணியினை தொடங்கியுள்ளார்.
அவர் படத்திற்கு டப்பிங் பேசியுள்ள புகைப்படங்கள் மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகை மீனா பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
'அண்ணாத்த' திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் மாதம் 4-ம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.