Teacher சொன்னதை தனது தொழிலாகவே மாற்றிய பிரதீப் ரங்கநாதன்... அவரே வெளியிட்ட பதிவு
இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் தனது வாழ்க்கையை மாற்றிய விடயம் குறித்து சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
பிரதீப் ரங்கநாதன்
கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தின் வெற்றி இவருக்கு சிறந்த இயக்குநர் என்ற பட்டத்தை கொடுத்துடன் விருதுகளையும் பெற்றுக்கொடுத்தது.
அதனை தொடர்ந்து லவ் டுடே படம் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். இந்த திரைப்படமும் சூப்பரை் ஹிட்டானது. குறிப்பான இளைஞர்கள் மத்தியில் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அடுத்தடுத்து கோமாளி, லவ் டுடே போன்ற படங்கள் மூலமாக பெரிய அளவில் பிரபலமான இவர், தற்போது டிராகன் படத்தில் நடித்துள்ளார். குறித்த திரைப்படம் நாளை மறுதினம் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், கல்லூரியில் படிக்கும் போது தேர்வு ஒன்றில் கேட்கப்பட்ட வினாவுக்கு விடை தொரியாமல் சுற்றிவளைத்து கதையெழுதி மாட்டிக் கொண்ட தனது மார்க் ஷீட்டின் புகைப்படத்தை தற்போது படத்துக்கான புரமோஷனாக மாற்றியிருக்கிறார்.
குறித்த பதிவில் பிரதீப் ரங்கநாதன், "டீச்சர் என்னை கதை எழுத வேண்டாம் என கூறினார். அதையே என் தொழிலாக மாற்றிக்கொண்டேன்" என குறிப்பிட்டு இருக்கிறார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் பல விதமான விமர்சன கருத்துக்களையும் பெற்று வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |