அத்தை மகனுடன் முதல் திருமணம்! காதலில் விழுந்த நடிகர் பிரபுவின் மகள்?
இளைய திலகம் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் டிசம்பர் 15ஆம் திகதி திருமணம் என்ற தகவல் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகர் பிரபுவுக்கு விக்ரம் என்கிற மகனும், ஐஸ்வர்யா என்கிற மகளும் உள்ளனர். ஐஸ்வர்யாவுக்கு தன் சகோதரியின் மகன் குணாலுடன் திருமணம் நடத்தி வைத்தார் பிரபு. திருமணத்திற்கு பிறகு கணவருடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார் ஐஸ்வர்யா என்ற தகவல் முன்பு வெளியானது.
அவர் Meltz Desertz எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். கேக் செய்து விற்பனை செய்யும் தொழிலில் ஐஸ்வர்யா வெற்றி கண்டிருக்கிறார். தன் கடையில் தயாரிக்கப்படும் கேக்குகளின் புகைப்படங்கள், வீடியோக்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் ஐஸ்வர்யா.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்
இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருக்கும் பிரபல ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடக்கவிருப்பதாகவும், அதில் திரையுலகினர் பலர் கலந்து கொள்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐஸ்வர்யா பிரபுவுக்கு திருமணம் என்கிற தகவலை சமூக வலைதளங்களில் பார்த்த ரசிகர்களோ, அவருக்கு தான் ஏற்கனவே திருமணமாகிவிட்டதே. இது என்ன சம்பந்தமே இல்லாமல் பிரபு மகளின் பெயரும், ஆதிக் ரவிச்சந்திரனின் பெயரும் அடிபடுகிறது என குழப்பத்தில் உள்ளனர்.
இருப்பினும் குறித்த தகவல் தொடர்பில் இரு வீட்டாரும் இதுவரை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |