ஜாக்பாட் அடித்துவிட்டு சைலண்டா இருக்கும் பிக்பாஸ் பூர்ணிமா...லேடி சூப்பர் ஸ்டாருடன் முதல் படம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள பூர்ணிமா, சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா உடன் இணைந்து நடித்துள்ள தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிக்பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி 50 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 18 போட்டியாளர்களில் பூர்ணிமா ரவியும் ஒருவர்.
இவர் யூடியூப் மூலம் பிரபலம் ஆனவர் ஆவார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் தான் கண்டெண்ட் குயினாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்த சீசனில் அதிகளவில் சண்டையிட்ட போட்டியாளரும் பூர்ணிமா தான்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் தான் நடித்த படங்கள் பற்றி வாய்த்திறக்காமல் இருந்தாலும், தற்போது அவர் முதன்முறையாக நடிகை நயன்தாரா உடன் நடித்துள்ளது தெரியவந்துள்ளது. நயன்தாராவின் 75-வது படமான அன்னபூரணி படத்தில் பூர்ணிமாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
நேற்று வெளியான இப்படத்தின் டிரைலரில் ஒரு காட்சியில் நயன்தாரா அருகே பூர்ணிமா இருப்பதை பார்த்த பின்னர் தான் அவர் இப்படத்தில் நடித்துள்ளதே ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது.
பூர்ணிமாவுக்கு கிடைத்த இந்த ஜாக்பாட் வாய்ப்பை பற்றி தான் பிக்பாஸ் ரசிகர்கள் தற்போது பேசி வருகின்றனர். மேலும் நயன்தாரா உடன் நடித்துள்ள பூர்ணிமாவுக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.
பூர்ணிமா நடித்துள்ள அன்னபூரணி திரைப்படம் வருகிற டிசம்பர் 1ஆம் திகதி வெளியாக உள்ளது. இதில் சோகமான விஷயம் என்னவென்றால் இப்படம் டிசம்பர் 1ஆம் திகதி வெளியிடப்பட இருப்பது பூர்ணிமாவுக்கு தெரியாது.
அவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது தான் அதன் ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டது. அன்னபூரணி திரைப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கி இருக்கிறார் இவர் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார்.
இப்படத்தில் நடிகை நயன்தாராவுக்கு ஜோடியாக ஜெய் நடித்துள்ளார். மேலும் ரெடின் கிங்ஸ்லி, சத்யராஜ் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |