அந்த நடிகையுடன் காதலில் விழுந்த பிரபு... - செய்தி கேட்டு வெச்சு விளாசிய சிவாஜி?
நடிகர் பிரபு
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக பிரபு வலம் வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனாவார். இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் உருவான ‘சின்னத் தம்பி’ திரைப்படத்திற்காக தமிழக அரசின் திரைப்பட விருதை பெற்றார்.
அந்த நடிகையுடன் காதலில் விழுந்த பிரபு
இந்நிலையில், ஒரு சேனலுக்கு மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேட்டி கொடுத்தார்.
அப்போது, அவர் குஷ்பூ, பிரபு குறித்த சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
80, 90களில் கொடி கட்டி பறந்த சமயத்தில் ஒரு நடிகையுடன், பிரபுவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டனர். இது பல பத்திரிக்கையில் வெளியானது. ஆனால், இது குறித்து இருவரும் எந்த விதத்திலும் மறுப்பு சொல்லவில்லை. பிரபுவின் காதல் தெரிந்து சிவாஜி மதம் காட்டி அதை ஏற்க மறுத்தாரா? என்று அப்பேட்டியில் கேட்க, அதற்கு அவர், ‘அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக பத்திரிக்கையில் வெளியானது.
ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. மேலும், இந்த விஷயம் சிவாஜி வரைக்கு தெரிந்த பிறகு, சிவாஜி மிகவும் கோபப்பட்டு எச்சரிக்கை செய்துள்ளார். இதனையடுத்து, பிரபுவும், அந்த நடிகையும் சேர்ந்து நடிப்பதை குறைத்துக் கொண்டார்கள்.
பிரபுவின் காதலால் அவர் வீட்டில் களேபரம் நடந்தது. இருந்தாலும், சினிமாவில் தன் பெயரை பிரபு எப்படி காப்பாற்றப்போறார் என்பதில் மிகவும் சிவாஜி கவனமாக இருந்தார்.
இதன் பிறகு, அந்த நடிகை ஒரு இயக்குனரை திருமணம் செய்து கொண்டார்.
பிரபுவிற்கு முதலில் தமிழ் உச்சரிப்பு சரியாக வராது. இதை சிவாஜி கண்டிப்பார். சில சமயங்களில் நடிப்பில் தவறு செய்தால் அப்பா அடிப்பார் என்று நடிகர் பிரபுவே கூறியிருக்கிறார் என்றார்.