இந்த லாக்டவுனில் நடிகர் பிரபுதேவா என்ஜாய் பண்ணி என்ன என்னெல்லாம் செய்துள்ளார் தெரியுமா?
கொரோனாவால் ஏற்படுத்தப்பட்டுள்ள லாக்டவுன் காரணமாக அனைவரும் தங்களது வீடுகளில் முடங்கியுள்ளனர்.
நடிகர், நடன இயக்குநர் மற்றும் இயக்குநர் என பல அவதாரங்களை எடுத்துவரும் பிரபுதேவாவும் தனது வீட்டில் முடங்கியுள்ளார்.
ஒரு வேலையை செய்பவர்களாலேயே வீட்டில் முடங்க முடியாதபோது, பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்துவந்த இவரால் எப்படி சும்மா வீட்டில் இருக்க முடியும் இதற்கு இவரே விளக்கம் அளிக்கிறார்.
ஒவ்வொரு எளிய விஷயத்தையும் அமைதியாக என்ஜாய் செய்வதாக கூறுகிறார்.
இந்த லாக்டவுனில் ஒவ்வொரு படத்தையும் பார்ப்பதாக தெரிவித்துள்ளார் பிரபுதேவா. ஓடிடியில் வெளியாகும் படங்கள் அனைத்தையும் உடனடியாக பார்த்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த கடினமான நேரத்தில் வெளியில் சென்று நண்பர்களை சந்திக்க முடியாத நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிரிக்கெட் போட்டிகள் மக்களை கட்டிப் போட்டதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.