வீட்டில் உருளைக்கிழங்கு இருக்கா? நாவூறும் சுவையில் உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்ங்க
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உருளைக்கிழங்கு என்றால் விரும்பி சாப்பிடுவார்கள்.உருளைக்கிழங்கில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்தை ஊக்குவிக்கிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது.
இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.இதில் பல வகையாக செய்து சாப்பிடலாம். உருளைக்கிழங்கை வைத்து வறுவல், பொரியல், பொடிமாஸ் மற்றும் கரக்குழம்பில் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். இதை வைத்து எப்படி பொடி மாஸ் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 4 உருளைக்கிழங்கு
- 1 பெரிய வெங்காயம்
- 4 பச்சை மிளகாய்
- 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் கடுகு
- 2 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 ஸ்பூன் சோம்பு
- தேவையான அளவு எண்ணெய்
- 1 கொத்து கருவேப்பிலை
- 1 கைப்பிடி அளவு கொத்துமல்லி இலைகள்
- சுவைக்கேற்ப உப்பு
செய்யும் முறை
முதலில் உருளைக்கிழங்கை சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீரில் நன்றாக வேகைவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.பின்னர் அதன் தோலை உரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தற்போது அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு நன்கு பொரிந்ததும் கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும்.
இவை இரண்டும் ஓரளவிற்கு சிவந்தவுடன் சோம்பை சேர்த்து பொரிய விடுங்கள். அடுத்து நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை கலந்து வதக்கிக்கொள்ளுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |