உங்க குழந்தைகளுக்கு சீஸ் ரொம்ப பிடிக்குமா? இப்படி கட்லெட் செய்து கொடுங்க
குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு சீஸ் கட்லெட் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றாமல் மிகவும் பிடிக்கும். அதிலும் உருளைக்கிழங்கு, சீஸ் என்றால் அதிகமாகவே பிடிக்குமாம். சிக்கனில் சீஸ் சேர்த்து சாப்பிடுவது அதிகரித்துள்ளது.
தற்போது உருளைக்கிழங்கில் சீஸ் சேர்த்து கட்லெட் செய்வது எவ்வாறு என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
உள்ளே வைப்பதற்கு
பதப்படுத்தப்பட்ட சீஸ் - 1 கப்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பச்சை குடைமிளகாய் - 1 1/2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது
உப்பு - 1/4 டீஸ்பூன்

கட்லெட்டிற்கு
வேக வைத்த உருளைக்கிழங்கு - 5 (துருவியது)
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
கிண்ணம் ஒன்றில் துருவிய சீஸ், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்றாக கிளறி தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்பு வேக வைத்த உருளைக்கிழங்கை துருவி பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இதில் காஷ்மீர் மிளகாய் தூள், கரம் மசாலா, சாட் மசாலா, உப்பு, மைதா ஆகியவற்றினை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து கொள்ளவும்.

கையில் எண்ணெய் தடவி, பிசைந்த மாவை கொஞ்சம் உருட்டி, தட்டையாக தட்டி கிண்ணம் போன்று செய்து நடுவே சீஸ் வைத்து மூடி உருட்டி கட்லெட் போன்று தட்டிக் கொள்ளவும்.
இதே போன்று அனைத்தையும் தட்டி வைத்து, தவாவை அடுப்பில் வைத்து 2-3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கட்லெட்டை சேர்த்து முன்னும், பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், உருளைக்கிழங்கு சீஸ் கட்லெட் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |