தபால் அலுவலக RD: மாதம் 100 முதலீட்டில் உறுதியான சேமிப்பு, குறைந்த வட்டியுடன் கடன்
பெரிய கனவுகள் குழந்தைகளுக்கான கல்வி, சொந்த வீடு, ஓய்வுக்குப் பிறகான வசதியான வாழ்க்கை... என நம் வாழ்க்கையில் பல இலக்குகள் இருக்கின்றன.
ஆனால் அவற்றைச் சாதிக்க ஏதுவான சேமிப்புத் திட்டங்களைத் தேர்வு செய்வது பலருக்குச் சவாலாகவே இருக்கிறது. அந்தச் சந்தேகத்துக்கு ஒரே பதில் தபால் அலுவலகத்தின் தொடர் வைப்புத் திட்டம்.
இந்த திட்டம், இந்திய அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பாதுகாப்பான சேமிப்புத் திட்டமாகும். இதில், ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்தால், ஆண்டுகளுக்குள் அது ஒரு பெரும் தொகையாக குவியும்.
தபால் அலுவலக RD
மாதம் ₹100 முதல்
புதிய முதலீட்டாளர்களுக்காக, மாதம் ₹100 மட்டுமே டெபாசிட் செய்து இந்த கணக்கைத் தொடங்கலாம். அதிக முதலீடு தேவையில்லை; வட்டி அதிகம், சேமிப்பு பாதுகாப்பானது என்பதே இதன் சிறப்பு.
தற்போதைய வட்டி விகிதம்
இந்த RD கணக்கில் ஆண்டுக்கு 6.7% வட்டி வழங்கப்படுகிறது. மேலும் இந்த வட்டி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்டு வட்டியாக கணக்கிடப்படுகிறது.
அதனால், உங்கள் முதலீட்டும் வட்டியும் சேர்ந்து வட்டி குவிக்கத் துவங்கும். உதாரணம்: நீங்கள் மாதம் ₹10,000 செலுத்தினால், 5 ஆண்டுகளில் ₹6,00,000 முதலீட்டாகும். இதற்கு மேலாக ₹1,13,659 வட்டியாக கிடைக்கும். மொத்தமாக ₹7,13,659 பெறலாம்.
ஒரு வருடம் கழித்து கடனும் பெறலாம்
RD கணக்கில் ஒரு வருட தவணை முடிந்த பிறகு, உங்கள் மொத்த வைப்புத் தொகையின் 50% வரை கடனைப் பெறலாம். இந்தக் கடனுக்கான வட்டி குறைவாகவே இருக்கும்.
RD முதிர்ச்சி அடையும் வரை, அதை திருப்பிச் செலுத்தலாம். இது உங்கள் சேமிப்பை பாதிக்காமல் நிதி உதவியை பெற ஒரு சிறந்த வழி.
யார் இந்தத் திட்டத்தில் சேரலாம்?
- ஊதியம் பெறும் பணியாளர்கள்
- சுயதொழில் நபர்கள்
- பெண்கள் மற்றும் இல்லத்தரசிகள்
- மாணவர்கள்
இவர்கள் அனைவரும் இந்தத் திட்டத்தில் எளிதாக இணையலாம். சிறு வயதிலேயே சேமிப்பு பழக்கத்தை உருவாக்க இது சிறந்த துவக்கம்.
கணக்கை எளிதில் எப்படி திறப்பது?
- போஸ்ட் ஆபிஸ் RD கணக்கைத் திறக்க,
- ஆதார் அட்டை
- பான் அட்டை
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
இவை இருந்தால் போதும். தற்போது, இந்த கணக்கை ஆன்லைனிலும் திறக்கலாம். ஒரு முறை கணக்கைத் தொடங்கியதும், ஒவ்வொரு மாதமும் உங்கள் தவணையை தவறாமல் செலுத்தினால், அதன் முழு வட்டியையும் பெற முடியும்.
பாதுகாப்பானதும், குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடியதும், அரசு உத்தரவாதமும் உள்ள போஸ்ட் ஆபிஸ் RD திட்டம், உங்கள் நீண்டகால கனவுகளை நனவாக்கும் நம்பகமான வழியாக இருக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |