பிக்பாஸ் முடிந்த பின்னரும் பேச்சை விடாத பூர்ணிமா.. நண்பிக்காக பகிர்ந்த பதிவு
பிக்பாஸ் டைட்டில் வின்னர் உண்மையில் மாயா தான் என பூர்ணிமா ரவி வெளியிட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் 7
பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக சென்று முடிந்துள்ளது.
இந்த சீசன் சின்னத்திரை நடிகை அர்ச்சனா டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து கடந்த சீசன்களை விட இந்த சீசனில் போட்டியாளர்கள் மத்தியில் பாரிய சர்ச்சை நிலவி வருகின்றது. பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போது சண்டையோடு நாளை கடத்திய பிரபலங்கள் வெளியில் வந்தும் வேலையை காட்டி வருகின்றது.
அதாவது மாயா- பூர்ணிமா இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் தனித்தனியாக சென்று பின்னர் நெருங்கிய தோழிகளானவர்கள். வீட்டில் இருந்த வரையில் மற்ற போட்டியாளர்களை அடிமைப்படுத்துவது, அவதூறாக பேசுவது இப்படியான வேலைகளை பார்த்து வந்தனர்.
இதனை தொடர்ந்து பூர்ணிமா பணப்பெட்டியுடன் வெளியேறி விட்டார். பைனல் வரை சென்ற மாயாவிற்கு சரியான அங்கிகாரம் கிடைக்காமல் 5ஆவது இடத்தை பிடித்து வெளியேறினார்.
இவர்களை எதிர்த்த அர்ச்சனா ஏகமனதாக டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டார்.
டைட்டில் வின்னரை மாற்றிய பூர்ணிமா
இப்படியொரு நிலையில் வெளியே இருக்கும் பிரபலங்கள் உள்ளே இருக்கும் போது என்னென்ன விடயங்களை செய்வேன் எனக் கூறினார்களோ அதனை வெளியில் வந்து செய்து காட்டிக் கொண்டிருக்கின்றனர்.
விஷ்ணு அர்ச்சனாவின் வெற்றியை கொண்டாடி வரும் நிலையில் பூர்ணிமா மாயாவிற்கு சார்பாக ஒரு பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், “நீங்க ஒரு போராளி. என் உண்மையான வெற்றியாளர். சொல்ல வேண்டியதெல்லாம் கட்டி அணைத்த படி கண்ணீரில் சில நிமிடம் சொல்லிவிட்டேன். லவ் யூ.” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தினேஷ், விஷ்ணு, அர்ச்சனா குறித்தும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் பிக்பாஸ் ரசிகர்களின் கவனங்களை ஈர்த்துள்ளது. அத்துடன், “வெளியில் வந்தும் நீங்கள் திருந்தவில்லையா?” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Congratulations to all the five finalists. As I said earlier it's not about winning but surviving. you guys survived throughout the season. So proud of all of you ?
— Poornima Ravi (@IamPoornimaRavi) January 18, 2024
Special congratulations to the Winner @Archana_ravi_
well played Girl and I loved the time spent with you inside…
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |