டயட் இருப்பவர்கள் வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடலாமா?
மற்ற நட்ஸ் வகைகளை விட வால்நட்டில் ஏகப்பட்ட ஊட்டசத்துக்கள் இருக்கின்றன.
வால்நட்டின் முழு ஆரோக்கியத்தை பெற வேண்டும் என நினைப்பவர்கள் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
வெறும் வயிற்றில் எடுத்து கொள்ளும் போது கொழுப்புகள், புரதம், நார்ச்சத்து, வைட்டமின், மினரல்கள் போன்ற சத்துக்கள் நேரடியாக கிடைக்கின்றன.
அத்துடன் அஜீரண கோளாறுக்களையும் வால்நட் சரிச் செய்கிறது. இதனால் எந்தவிதமான பயமுமின்றி வால்நட்டை எடுத்து கொள்ளலாம்.
அந்த வகையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதனை பதிவில் பார்க்கலாம்.
வால்நட் சாப்பிடலாமா?
1. வால்நட் சாப்பிடுவதால் டைப்-2 நீரிழிவு நோய் வரும் அபாயம் குறையும்.
2. ஓமேகா-3 ஃபேட்டி ஆசிட் வால்நட்டில் இருக்கின்றது. இதனால் கொலஸ்ட்ரால் அளவு, உடலில் உள்ள வீக்கம் போன்றவை குறைகிறது. அத்துடன் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி இதய ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கின்றது.
3. வெறும் வயிற்றில் வால்நட்டை எடுத்து கொள்ளும் போது ஓமேகா-3 ஃபேட்டி ஆசிட் நேரடியாக மூளையில் தாக்கம் செலுத்துகின்றது. இதன் காரணமாக அறிவுத்திறன், ஞாபக சக்தி குறைபாடு பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம். பள்ளி செல்லும் சிறார்களுக்கு இதனை நட்ஸாக கொடுத்து பழக்குவது சிறந்தது.
4. டயட்டில் இருப்பவர்கள் காலையில் எப்படி நாளை துவங்குவது என யோசித்து கொண்டிருப்பார்கள். இப்படியான நேரங்களில் வால்நட்டுடன் துவங்கலாம். கலோரிகள் அதிகமாக இருந்தாலும் வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது பாதிப்பு குறைவாக தான் இருக்கும். காலையில் உடற்பயிற்சி செய்பவர்கள் எடுத்து கொள்வது நல்லது.
5. வால்நட்டில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. இந்த சத்து செரிமானத்திற்கு உதவியாக இருக்கும் மற்றும் சிலர் மலச்சிக்கல் பிரச்சினையால் அவஸ்தைப்படுபவர்களுக்கும் சிறந்த நிவாரணம் அளிக்கிறது.
6. செல்களில் ஏதாவது பாதிப்பு ஏற்படும் போது வெறும் வயிற்றில் நாம் எடுத்து கொள்ளும் வால்நட்கள் மருந்தாக செயற்படும். ஏனெனின் வால்நட்டில் பாலிபீனால் மற்றும் வைட்டமின் இ போன்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |