ஹோட்டல் சுவையில் நாவூற வைக்கும் பூரி மசாலா- செய்வது எப்படி?
பொதுவாகவே இந்தியர்கள் விரும்பி உண்ணும் உணவுகளில் பூரியும் ஒன்று. ஆனால் ஒருசிலருக்கு வீட்டில் செய்யும் பூரி மசாலாவை விட ஹோட்டலில் செய்யும் பூரி மசாலாவையே விரும்பி சாப்பிடுவார்கள்.
ஆகவே இன்று நாங்கள் ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே கமகமவென மணக்கும் பூரி மசாலாவை வீட்டில் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 1/2 கிலோ
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடலை பருப்பு – 2 கரண்டி
கடுகு – ஒரு ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – ஒரு கரண்டி
பச்சை மிளகாய் – 5
பெரிய வெந்தயம் – 2
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – 1/2 கரண்டி
தக்காளி – 1
தண்ணீர் – 2 டம்ளர்
கடலை மாவு – 2 கரண்டி
கொத்தமல்லி இலை – சிறிதளவு
செய்முறை
வெங்காயத்தை நீளவாக்கில் நைசாக கட் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கு வைத்துக்கொள்ளுங்கள். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைத்துக்கொள்ளுங்கள்.
உருளைக்கிழங்கை குக்கரில் மூன்று விசில் வைத்து வேகவைத்து, தோலை உரித்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
கொத்தமல்லி இலையை சிறிதளவு பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் இரண்டு கரண்டி எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடலை பருப்பு மற்றும் கடுகு ஆகியவற்றை சேர்க்கவும்.
கடுகு பொரிந்து வந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு கரண்டி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு நறுக்கி வைத்து பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். 5 நிமிடம் கழித்து அதனுடன் 1/2 கரண்டி மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு மற்றும் தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு வேகவைத்துள்ள உருளைக்கிழங்கை மசித்து மசாலாவுடன் சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி மசாலாவை 10 நிமிடம் கொதிக்கவைக்கவும்.
10 நிமிடம் கழித்து ஒரு கிண்ணத்தில் இரண்டு கரண்டி கடலைப் பருப்பு எடுத்துக்கொள்ளுங்கள் அதில் தண்ணீர் ஊற்றி கரைத்து மசாலாவில் சேர்த்து கலந்து இரண்டு நிமிடம் கொதிக்கவும்.
இரண்டு நிமிடம் கழித்த பொடிதாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை மசாலாவில் தூவி ஒரு முறை கிளறிவிட்டு இறக்கினால் ஹோட்டல் ஸ்டைல் பூரி மசாலா தயார்.