வீட்டில் பூண்டு இருக்கா? சாம்பாருக்கு பதில் இதை செய்ங்க சுவை பிரமாதம்
உணவின்றி நம் வாழ்க்கை இயங்காது. நாம் ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமானது காலை உணவு தான். காலையில் பொதுவாக தமிழர் பண்பாட்டில் செய்வது இட்லி, தோசை தான்.
காலையில் வேலைக்கு செல்லும் போது இந்த ரெசிபி சிறந்ததாக இருக்கும். இந்த ரெசிபி செய்ய வெங்காயம் தக்காளி தேவை இல்லை. இந்த ரெசிபி செய்வதற்கு மிகவும் முக்கியமானது பூண்டு தான்.
முக்கியமாக இந்த பூண்டு சைடு டிஷ் இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். இதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் வாசித்து தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
- பூண்டு - 15 பல்
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1/4 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
- சீரகத் தூள் - 1/4
- தண்ணீர் - சிறிது
- தயிர் - 1/2 கப்
- உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை
முதலில் பூண்டு பற்களை மிக்ஸியில் போட்டு ஒருமுறை லேசாக அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைக்க வேண்டும்.
அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, பின் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள் சேர்த்து குறைவான தீயில் வைத்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர் அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் 1/2 கப் தயிரை நன்கு அடித்து சேர்க்க வேண்டும். தயிரை சேர்த்ததும், தாமதிக்காமல் நன்கு கிளறி விட வேண்டும்.
பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். பின் 3 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பூண்டு கிரேவி தயார். இதை எப்போதும் சாப்பிடலாம். இட்லி, தோசை மற்றும் சூடான சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
![வெற்றியின் ரகசியம்: உங்க வயது முக்கியமல்ல... உங்க உளவியல் வயது தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/0cff969b-8be0-4468-8b16-421f4aaa9ccd/25-67ac8e1dad626-md.webp)