பூஜா ஹெக்டே காதலனுக்கு இவ்வளவு வயது குறைவா? ஆனா அப்படி தெரியலையே
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை தான் பூஜா ஹெக்டே இவருடைய காதலன் என தற்போது புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

பூஜா ஹெக்டே
டோலிவுட்டின் 'புட்டபொம்மா' பூஜா ஹெக்டே தற்போது சினிமாவில் தனது நடிப்பு வேகத்தைக் குறைத்துள்ளார்.
ஒரு காலத்தில் தொடர்ச்சியான படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை பூஜா ஹெக்டே, தற்போது படங்களில் குறைவாகவே காணப்படுகிறார்.

தொடர் தோல்விகளைச் சந்தித்த பூஜா ஹெக்டே, தற்போது ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அவர் சினிமாிவில் முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதன் பின்னர் தற்போது விஜய் படமான ஜனநாயகன் படத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் பாலிவுட் நடிகருடன் டேடிங் இல் இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை நடிகர்கள் பற்றி வதந்திகளும் கிசுகிசுக்களும் வருவது சாதாரணமாகி விட்டது.
இந்த நிலையில் தற்போது பூஜா ஹெக்டே தன்னை விட இளைய வயது நடிகருடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படும் தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பூஜா ஹெக்டே விற்கு 35 வயதாகிறது. கடந்த மாதங்களாகவே பூஜா ஹெக்டே மற்றும் ரோஹன் மெஹ்ரா ஆகியோர், டேட்டிங் செய்து வருவதாக வதந்திகள் பரவி வந்தன.
இப்போது, இந்த உறவு உண்மையானது என்றும், அவர்கள் சில ஆண்டுகளாக காதலில் வருவதாகவும் பாலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. பூஜாவை விட அவருடைய காதலனுக்கு ஒரு வயது குறைவு எனப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |