இசைவெளியீட்டு விழாவில் சித்தார்த் உடன் திரிஷா செய்த காரியம்! பழைய ஞாபகம் வந்திருச்சா? ரசிகர்கள் கேள்வி
பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் சித்தார்த் உடன் சேர்ந்து நடிகை திரிஷா அமர்ந்த இடத்தில் ஆட்டம் போட்ட காட்சி வைரலாகி வருகின்றது.
நடிகை திரிஷா
நேற்றைய தினம் நடைபெற்ற பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவைக் குறித்த சுவாரசிய காட்சிகள் தற்போது வந்து கொண்டிருக்கின்றது.
முன்னதாக மணிரத்தினத்தின் இயக்கத்தில் சித்தார்த்தும் த்ரிஷாவும் நடித்த ஆயுத எழுத்து படத்தில் இடம்பெற்ற யாக்கை திரி பாடல் தான் மேடையில் இசைக்கப்பட்டது.
மேடையில் இசைக்கப்பட்ட உடன் பழைய நினைவுகளுக்கு திரும்பிய த்ரிஷா மற்றும் சித்தார்த் பாடலுக்கேற்றவாறு இருக்கையில் அமர்ந்தபடி போட்ட ஆட்டம் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
பொன்னியின் செல்வன்
மணிரத்தினத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வனில் த்ரிஷா குந்தவையாக நடித்து வருகிறார். மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இவரின் நடிப்பை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, பிரபு, கார்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்த படம் உருவாகியுள்ளது.
Vibe ?❤️ from #PS1AudioLaunch @trishtrashers pic.twitter.com/b5zWFVxHqR
— Balaji Duraisamy (@balajidtweets) September 7, 2022
