பொன்னியின் செல்வன் 2: இசை வெளியீட்டுக்கு வரும் சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா? குஷியில் விஜய் ரசிகர்கள்!
பொன்னியின் செல்வன் பாகம் 2 விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதற்கான இசைவெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்துள்ளது.
இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா என பல பிரபல நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியிருந்தனர்.
இத்திரைப்படத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இவரின் இசையமைப்பில் வந்த அத்தனை பாடல்களும் இன்னும் பட்டிதொட்டியெங்கும் ஒளித்துக் கொண்டுதான் இருக்கிறது.
பொன்னியின் செல்வன் 2
இந்நிலையில் பொன்னியின் செல்வன் பாகம் 2 எப்போது வரும் என்று காத்திருந்தவர்களுக்கு தீனி போடும் வகையில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதாவது, எதிர்வரும் ஏப்ரல் 28ம் திகதி பொன்னியின் செல்வன் 2 வெளியாக உள்ளது. முன்னதாக பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி வைரலாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் 2 படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மார்ச் 29ம் திகதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் பிரம்மாணடமான இசை விழாவில் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும், இந்தப் படத்தின் பாடல்களுக்கு ரஹ்மான் இசையமைக்கும் வீடியோவை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கலந்துகொள்ளவிருப்பதாக ஒரு தகவல் பரவிவருகிறது.
இருப்பினும் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
#PonniyinSelvan2 Music and Trailer Launch on 29th March at Jawaharlal Nehru Indoor Stadium, Chennai!
— A.R.Rahman (@arrahman) March 26, 2023
#CholasAreBack
#PS2 #ManiRatnam @madrastalkies_ @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth @IMAX @primevideoIN @ShakthisreeG @ShwetaMohan @Chinmayi pic.twitter.com/Xz18idjPHd