750 ஊசிகள் தாங்கிய வில்லன் நடிகர்- உயிரைக் காப்பாற்ற செலவழித்த பெருந்தகை யார்?
நடிகர் பொன்னம்பலம், உடல்நலம் மோசமாக இருந்த போது கோடிக்கணக்கில் பணம் கொடுத்து உதவிய நடிகர் குறித்து அவர் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் பொன்னம்பலம்
தனது கம்பீரமான பலத்தால் ஹீரோக்களை பந்தாடும் வில்லனாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் பொன்னம்பலம்.
இவர், கடந்த 1988-ம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான கலியுகம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா, மைக்கல் மதன காமராஜன், மாநகர காவல் ஆகிய படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகினார்.
இவர் நடித்த படங்களில் நடிகர் சரத்குமாரின் நாட்டாமை, கூலி, ரஜினியின் முத்து ஆகிய படங்கள் சினிமா வாழ்க்கையில் சிறந்த வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. கடந்த 1999-ம் ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் 10 படங்கள் திரையரங்குகளில் வெளியாகின.
பணம் கொடுத்த உதவிய நடிகர்
அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி, கமல், அஜித், விஜய், சத்யராஜ், விஜயகாந்த் ஆகியோருடன் இணைந்து நடித்திருக்கிறார். இவ்வளவு பிரபலமான இருந்த நடிகர் தற்போது உடல்நலம் பாதிப்பு காரணமாக அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
கடந்த சில மாதங்களாக நடிகர் பொன்னம்பலம் பற்றிய செய்திகள் அதிகமாக வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், உடல்நலம் குறித்து பொன்னம்பலம் பேசுகையில், “நான் மருத்துவமனையிலிருந்த போது எனது சிகிச்சைக்காக சரத்குமார் பணம் உதவி செய்தார். அத்துடன் மற்றவர்களுடன் பேசி, உதவி எடுத்து கொடுத்திருக்கிறார்.
ஒரே இடத்தில் 750 ஊசிகளா?
ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஊசி போட வேண்டும். கடந்த 4 வருடங்களாக ஒரே இடத்தில் 750 ஊசிகளை செலுத்தியுள்ளேன். இது ஒரு பெரிய கொடுமை. உப்பு சாப்பிடவே கூடாது. நிறைய உணவுகளை சாப்பிடக்கூடாது. என் எதிராளிக்கு கூட இப்படியொரு நிலை வர வேண்டாம்.
திருமணமாகி 25 வருடமாகிவிட்டது. ஆனால் இன்று வரை குடும்பத்தினரை மருத்துவமனைக்கு அழைப்பதில்லை. வீட்டில் தனியாக தான் இருக்கிறேன்.
மருத்துவ செலவுக்காக ரூ.35 லட்சம் செலவு ஆனது. எனக்கு ரூ.1.15 கோடியை கொடுத்து நடிகர் சிரஞ்சீவி எனக்கு உதவினார். தெரிந்தவர்களில் பல நடிகர்கள் இருக்கிறார் ஆனாலும் நான் கேட்கவில்லை...” என கவலையாக பேசியிருக்கிறார். இந்த செய்தி ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
