சரவணன் மாமியாரிடம் வசமாக சிக்கிய குமார்.. காரக்குழம்பு சட்டியுடன் வரும் அரசி
சரவணன் மாமியாரிடம் மெதுவாக பேச்சு கொடுக்க நினைத்த குமாருக்கு, மாமியார் கொடுத்த டுவிஸ்ட்டால் இருந்த இடம் தெரியாமல் ஓடியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பிரபல தொலைக்காட்சியில் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.
இந்த சீரியலில், முதல் பாகம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், இரண்டாம் அதே நடிகர்களுடன் சிலருடன் மாமியார்- மருமகள்கள் பந்தம் என்ற தொனிப் பொருளுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில், பாண்டியனின் கடைசி பெண்ணை ஏமாற்றி கோமதி வீட்டிலுள்ள குமரவேல் எப்படியாவது அவமானப்படுத்த வேண்டும் என காதலிப்பது போன்று நடித்து வந்தார்.
குடும்பத்தின் மானம் தன்னால் போய் விடக் கூடாது என முடிவு செய்த அரசி, காரில் கிடந்த தாலியை தனது கையால் கட்டிக் கொண்டு குமரவேல் தான் காட்டினார் என கதையை மாற்றிக் கூறி முத்து வேல், சக்திவேல் வீட்டிற்கு மருமகளாக சென்று விட்டார்.
உஷாரான குமரவேல்
இந்த நிலையில், சீரியலில் அரசி- குமரவேல் தம்பதிகள் தற்போது பிரிந்து விட்டனர். உண்மைகள் அனைத்தும் பாண்டியனுக்கு தெரியவந்துள்ளது.
அரசியின் வாழ்க்கை வீணாகியதற்கு சுகன்யா தான் காரணம் என மீனாவும் ராஜீவும் வீட்டிலுள்ளவர்களிடம் கூறி விட்டனர். அரசிக்கு செய்த கொடுமைக்கு குமார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் கைது தொடர்ந்து குமார் குடும்பத்தினர் கடும் கடுப்புடன் பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க காத்திருக்கிறார்கள்.
இப்படி சீரியல் பரபரப்பாக செல்லும் வேளையில், குமார் சரவணன் மாமியாரிடம் சென்று பொய் வெளியில் வராமல் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு அவர் “அரசி அந்த காரக்குழம்புவுடன் வா..” என குமாரை கலாய்த்து ஓட விடுகிறார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. குமாரின் இது போன்ற செயல்கள் இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
