மாதுளையை உரிப்பதற்கு மிகவும் எரிச்சல்படுபவரா நீங்கள்? உங்களுக்கே இந்த காட்சி
மாதுளை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு பழம். பழத்தின் உள்ளே எண்ணற்ற விதைகள் காணப்படும். விதையை சுற்றிலும் மெல்லிய சதைப்பற்றுடன் காணப்படும்.மாதுளம் பழத்தில் ஏராளமான ஊட்ட சத்துக்கள் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன.
100 கிராம் மாதுளம் பழத்தில் 83 கலோரிகள் உள்ளன. அதில் 1.2 கிராம் கொழுப்பு, 1.7 கிராம் புரதம், 19 கிராம் மாவு சத்து மற்றும் 4 கிராம் நார்ச்சத்து உள்ளது்.
ஆனால் மாதுளையை அதிக அளவு சாப்பிட்டால் அரிப்பு, வீக்கம், மூக்கு ஒழுகுதல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்றவை ஏற்படுவதாகவும் கூறப்படுகின்றது.
ஆனால் இவ்வாறு பல நன்மைகளை அளிக்கும் மாதுளையை உரித்து சாப்பிடுவதற்கு பலரும் எரிச்சல் அடைவார்கள். அவ்வாறு எரிச்சல் அடைபவர்களை கூல் படுத்தும் காட்சியே இதுவாகும்.