அடேங்கப்பா.. தினமும் மாதுளை ஜூஸ் குடித்து வந்தால் இவ்வளவு நன்மை கிடைக்குமாம்
நமது உடலுக்கு பழங்கள் ஆரோக்கியத்தை அளிக்கவல்லது. ஒவ்வொரு பழத்திற்கும் ஒரு தனி சிறப்புள்ளது.
மாதுளை ஒரு குறுமரமாகும். இந்த மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பழம், பூ மற்றும் பட்டை என அனைத்திலும், ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.
மாதுளையின் தாயகமாக ஈரான் சொல்லப்படுகிறது. மாதுளம் பழத்தை ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஏராளமாக பயிரிட்டு வளர்த்து வருகின்றனர்.
வைட்டமின்கள் நம் உடலுக்கு அவசியமானதாகும். மாதுளை பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. எனவே சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் தினமும் மாதுளை பழத்தை சாப்பிடலாம்.
மாதுளம்பழத்தில் உள்ள அதிக அளவிலான நார்ச் சத்துக்கள் உடலின் ஆரோக்கியம் மற்றும் ஜீரண மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது இதனால் தினமும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம். மாதுளம் பழம் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், சரும பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
தினமும் மாதுளைபழம் ஜூஸ் குடித்து வந்தால் எவ்வளவு நன்மைக்கு கிடைக்கும் என்று பார்ப்போம் -
புற்றுநோயைத் தடுக்க
தினமும் மாதுளைபழம் ஜூஸ் குடித்து வந்தால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்கும். புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் செல்கள் அதிகரிப்பதைத் தடுக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
உடல் கொழுப்பை குறைக்க
தினமும் மாதுளைபழம் ஜூஸ் குடித்து வந்தால், கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும். தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுகளை எதிர்த்துப் போராடும். வாய்வழி தொற்றுகளைத் தடுக்க உதவி செய்யும்.
மூட்டுவலியை போக்க
தினமும் மாதுளைபழம் ஜூஸ் குடித்து வந்தால், அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தை குணப்படுத்த உதவி செய்யும். மேலும், மூட்டுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் நொதிகளைத் தடுத்து நிறுத்தும். இது ஆர்த்திரிடிஸ் பிரச்சினை உள்ளவர்கள் மாதுளை பழத்தை சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.
தலைமுடி வளர
தினமும் மாதுளைபழம் ஜூஸ் குடித்து வந்தால், தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றும்.
தாம்பத்திற்கு
தினமும் மாதுளைபழம் ஜூஸ் குடித்து வந்தால் உடலில் நரம்புகள் பலம் பெற்று தாம்பத்திய சுகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
ஞாபக சக்திக்கு
தினமும் மாதுளைபழம் ஜூஸ் குடித்து வந்தால், மூளை செல்களின் வளர்ச்சி மேம்படும். மேலும், வயதாவதால் மனிதர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதி, மந்தத்தன்மை போன்றவற்றை மாதுளை பழம் நீக்குவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.