முடக்கப்பட்ட கணக்குகளுக்கு பொது மன்னிப்பு! எலான் மஸ்க்
கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்ட டுவிட்டர் கணக்குகளுக்கு "பொது மன்னிப்பு" வழங்கவுள்ளதாக எலான் மஸ்க் தகவல் வெளியிட்டுள்ளார்.
டுவிட்டர் நிறுவனம் விற்பனை
டுவிட்டர் நிறுவனத்தை சில மாதங்களுக்கு முன்னர் எலான் மஸ்க் வாங்கியிருந்தார்.
அன்றிலிருந்து பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் எலான் மஸ்க்.
நிர்வாக குழுவில் இடம்பெற்றிருந்த பலரையும் வேலையை விட்டு நீக்கியதுடன், ஊழியர்களின் எண்ணிக்கையையும் குறைத்தார்.
இந்நிலையில் டுவிட்டரின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன.
கருத்துகணிப்பு
இது குறித்த தொடர்ச்சியாக சர்சைகள் எழுந்ததால் எலான் மஸ்க் டுவிட்டரில் புதிய கருத்துகணிப்பொன்றை பதிவிட்டிருந்தார்.
அதில், முடக்கப்பட்ட கணக்குகள் சமூக ஊடகத்தளத்தில் மீண்டும் அனுமதிக்கப்பட வேண்டுமா? என்று ஒரு கருத்தை முன்வைத்து பயனர்கள் பதிலளிக்கும் வகையில் பதிவிட்டிருந்தார்.
இந்த கணிப்பின் பிரகாரம் 72.4% பயணர்களின் வாக்குகள் "ஆம்" என்றே வந்திருந்தது. இதனால் முடக்கப்பட்ட சில கணக்குகள் அடுத்த வாரம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என அறிவித்துள்ளார்.
இவரின் இந்த நடவடிக்கை பயனர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.
Should Twitter offer a general amnesty to suspended accounts, provided that they have not broken the law or engaged in egregious spam?
— Elon Musk (@elonmusk) November 23, 2022