ஏ. ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியை பாதியில் நிறுத்திய பொலிசார்! என்ன காரணம் தெரியுமா?
கச்சேரியில் பாடிக்கொண்டிருந்த ஏ.ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை பாதியில் நிறுத்திய பொலிசாரின் வீடியோ வைரலாகி வருகிறது.
இசை பயணம்
தன்னுடைய இசை பயணத்தை “ரோஜா ” திரைப்படத்தின் மூலம் ஆரம்பித்த ஏஆர் ரஹ்மானுக்கு, அந்த படம் நினைத்து பார்க்காத வெற்றியை பெற்று தந்து தேசிய விருதும் வாங்கி தந்தது.
இதனை தொடர்ந்து இவரின் பெயர் இந்தியா முழுவதும் பரவ ஆரம்பித்தது. ஹிந்தி, தெலுங்கு என அனைத்து மொழி படங்களிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.
ரஹ்மானுக்கு கோல்டன் க்ளோப் விருதும், இரண்டு ஆஸ்கர் விருதுகளும் கிடைத்தது.
ரஹ்மான் இந்தியா மட்டுமல்ல அமெரிக்கா , மலேசியா என பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.
கச்சேரியில் அவமானப்படுத்திய பொலிஸார்
இந்த நிலையில் ஏ.ஆர் ரஹ்மான் பூனேவில் இசை கச்சேரி ஒன்றை நடத்தியுள்ளார். மேலும் நிகழ்ச்சியில் முன்னணி பாடகராக இருந்து ரஹ்மானுக்கு நேரம் போனதே தெரியவில்லை.
இதனால் கச்சேரி 10 மணியை தாண்டி சென்றுக் கொண்டிருந்தது. இதனால் கடுப்பான பொலிஸார் அதிகாரியொருவர், மேடைக்கு சென்று ரஹ்மான் பாடிக் கொண்டிருக்கும் போது நிறுத்துமாறு கூறியுள்ளார்.
இதனால் கடுப்பான ரசிகர்கள் மேடைக்கு கீழ் நின்று கூச்சலிட ஆரம்பித்துள்ளார்கள்.
இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த ரசிகர்கள், ரஹ்மான் சாருக்கே என்ட் கார்ட்டா? என கருத்துக்களை பதிவு செய்துள்ளார்கள்.
A police officer in #Pune switched off @arrahman's live concert as the show passed 10 pm deadline. pic.twitter.com/mVjtW66ksT
— Samrat Phadnis (@PSamratSakal) May 1, 2023