தமிழ்நாடு! ஏஆர் ரஹ்மான் அணிந்திருந்த மாஸ்கின் விலை என்ன தெரியுமா?
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஏஆர் ரஹ்மான் தன்னுடைய மகனுடன் பதிவிட்ட புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவின் 2வது அலையால் இந்தியா படுமோசமான விளைவுகளை சந்தித்துள்ளது, எனவே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகன் அமீனுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்தார்.
அதில், அவருடைய இருப்பிடத்தை தமிழ்நாடு என குறிப்பிட்டிருந்தார், இது ஏன்? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தற்போதைய சூழலில் தமிழ்நாடா? தமிழகமா? என கேள்விகள் எழுந்துள்ள நிலையில், ஏஆர் ரஹ்மானின் இந்த மாற்றம் பல சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஆனால் இது எதிர்பாராமால் நடந்த ஒன்று தான் என ஏஆர்ரஹ்மான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் அணிந்திருந்த மாஸ்க் பற்றியும் நெட்டிசன்கள் கமொண்டுகளை பதிவிட்டு வருகின்றனர், அந்த மாஸ்கில் இரண்டு பக்கமும் சுத்திகரிப்பான் உள்ளது.
இதன் விலை சுமார் ரூ.18,000 என்பது தெரியவந்துள்ளது.