ஃபிரிட்ஜில் இந்த உணவுகளை மறந்தும் வைக்காதீங்க.. வதந்திகளாக பரவும் தகவல்
பொதுவாக சில ஆண்டுகளுக்கு முன்னர் வசதியானவர்களின் வீடுகளில் மட்டுமே காணப்பட்ட ஃபிரிட்ஜ் இன்று பரவலாக அனைவரும் பயன்படுத்துகிறார்கள்.
ஃபிரிட்ஜில் தேவையான உணவுப் பொருள்கள் கெட்டுப் போகாமல் பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம்.
தற்போது பொருளாதார நெருக்கடி அதிகமாக இருப்பதால் மக்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். ஃபிரிட்ஜ் வந்த ஆரம்ப காலங்களில் பால், தோசை மாவு, பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவைகள் வைக்கப்பட்டன.
இதன் பின்னர் இறைச்சி, சமைத்த உணவுகள் என பல தரப்பட்ட பொருட்களை மக்கள் பதப்படுத்த தொடங்கி விட்டனர்.
ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட பொருள்கள் என்னதான் ஃப்ரெஷ்ஷாக இருந்தாலும் அதற்கான வதந்திகள் மக்களிடையே ஏராளம் உள்ளன. இதனால் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்றெல்லாம் கதைகளும் உள்ளன.
அந்த வகையில் குடல்நோய் சிகிச்சைக்காக மருத்துவர்கள் கூறும் விளக்கங்கள் குறித்து தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
வதந்திகள்
1. மிஞ்சிய உணவை வீசுவதை தவிர்த்து கெட்டுப் போகாமல் ஃபிரிட்ஜில் வைத்து பாதுகாக்கலாம். இது போன்று பதப்படுத்தும் உணவுகள் நஞ்சாவதற்கு வாய்ப்பு குறைவு. எஞ்சிய உணவை காற்று புகாத பாத்திரங்களில் எடுத்து ஃபிரிட்ஜில் வைத்து விடலாம்.
2. ஃபிரிட்ஜில் வைக்கப்படும் உணவுகளை 3 முதல் 4 நாட்களில் சாப்பிட்டு முடிக்க வேண்டும். நீண்ட காலம் வைத்து சாப்பிட்டால் உணவு ஒவ்வாமை ஏற்படும்.
3. ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் பாக்டீரியாக்கள் அழியும். ஆனால் நச்சுகள் வெளியேறாது. ஆகவே ஃபிரிட்ஜில் வைக்கப்படும் உணவுகள் குறித்து அதிக கவனம் தேவை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |