நிமோனியா அறிகுறிகள்... அலட்சியப்படுத்தினால் உயிராபத்து உறுதி எச்சரிக்கும் மருத்துவர்கள்!
தற்காலத்தில் பெருகிவரும் வாகனங்கள், தொழிற்சாலைகள், எரிபொருள் பயன்பாடுகள் என உலகில் பல்வேறு நகரங்கள் குப்பையாக மாறிக் கொண்டிருக்கின்றது.
இவ்வாறு ஏற்படும் மாசுபாடானது மனிதர்களின் சுவாச மண்டலத்தை வலுவாக பாதிக்கின்றது. நுண்துகள் சுவாச மண்டலத்தில் ஆழமாக ஊடுருவி, வீக்கம் மற்றும் திசு சேதத்திற்கு வழிவகுக்கிறது.இது நாள்பட்ட நுரையீரல் அழற்சியை அதாவது நிமோனியாவை ஏற்படுத்துகின்றது.
நிமோனியா என்றால் என்ன?
நுரையிரல் செல்களில் ஏற்படும் அழற்சி தான் நிமோனியா என்றழைக்கப்படுகிறது. பொதுவாக நம்முடைய நுரையீரலில் அல்வியோலி என்றழைக்கப்படும் மிகவும் சிறிய காற்றுப்பைகள் காணப்படுகின்றது.
இவை துசு மற்றும் பாக்டீரியா தொற்றுக்கு உள்ளாகும் போது நிமோனியா என்ற பாதிப்பு ஏற்படுகின்றது. நுரையீரலில் ஏற்படும் இந்த அழற்சியால் ஒரு நபர் சுவாசிக்க கஷ்டப்படும் நிலை ஏற்படுகின்றது.
பல்வேறு ஆதாரங்களிலிருந்து வெளியிடப்படும் VOC களான Paints மற்றும் Solvents, காற்றுப்பாதைகளை எரிச்சலூட்டுவது மட்டுமின்றி COPD அறிகுறிகளையும் மோசமடைய செய்கிறது.
முக்கியமாக வாகனங்களில் வெளியேறும் நைட்ரஜன் ஆக்சைடுகள், காற்றுப்பாதை சுருக்கம் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். இந்த வகையான மாசுபாடுகளை நீண்டகால சுவாசிக்கும் வெளிப்பாடு சிஓபிடி அறிகுறிகளை மேலும் மோசமாக்கும்.
நிமோனியா பொதுவாக வைரஸ்கள் மற்றும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா மற்றும் ஹீமோபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா போன்ற பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது.
நடைபயிற்சி நிமோனியா எனப்டும் நிலை பொதுவாக மைக்கோபிளாஸ்மா நிமோனியா என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
நிமோனியாவின் முக்கிய அறிகுறிகள்
இதயதுடிப்பு அதிகரித்தல்
காய்ச்சல்
குளிச்சி மற்றும் அதிக வியர்வை
இருமல்
நெஞ்சுவலி
குமட்டல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு போன்றன நிமோனியாவின் முக்கிய அறிகுறிகளாக பார்க்கப்படுகின்றது.
ஒரு வாரத்துக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல், குளிர், மூச்சுத்திணறல், சுவாசிக்கும் போது மார்பு வலி, அதிகப்படியான இதய துடிப்பு, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் சளி வெளியேறினால் இவ்வாறான அறிகுறிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
தொடர்ச்சியான இருமல், வயிறு எரிச்சல் போன்ற அறிகுறிகள் நீடித்தாலும் அது குறித்து அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். குறித்த அறிகுறிகள் நிமோனியா பாதிப்பை ஏற்படுத்தும் அறிகுறிகளாக அமையும்.
சளியுடன் கூடிய காய்ச்சலும் இருமலும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். இல்லையென்றால் மோசமான விளைவை சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். காரணம் நிமோனியாவின் தீவிர நிலை மரணத்தை ஏற்படுத்தும்.
நாம் தினமும் செய்யக்கூடிய சாதாரண வேலைகளை செய்யும் போது அல்லது ஓய்வாக இருக்கும் போது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவது நிமோனியாவின் தீவிர நிலையாகும்.
மூச்சு விடும் போது நெஞ்சு வலி, சளி அல்லது காய்ச்சல் குணமடைந்த பின்னரும் திடீரென உடல் நிலை மோசமடைதல், இதய நோய், நீரழிவு அல்லது நாள்பட்ட நுரையீரல் நோய் போன்ற உடல் நல பிரச்சனைகள் இருந்தாலும் நீங்கள் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.
சிகிச்சை முறை
நிமோனியா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் வீட்டிலேயே நீங்கள் வாய்முலம் நுண்ணுயிர் எதிரப்பிகளுடன் கூடிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
ஆண்டிபயாடிக் சிகிச்சையால் ஐந்து நாட்களுக்குப் பின்னர் பெரும்பாலான நோயாளிகள் குணமடைகின்றனர். ஆனால் நோயின் தாக்கம் தீவிரமாகும் பட்சத்தில், அதிக ஆபத்தில் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியது அவசியம்.
தடுக்கும் முறை
குறிப்பாக புகைபிடிப்பதை நிறுத்துவது நிமோனியாவைத் தடுப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. தொற்றுகளிலிருந்து தப்பிக்க அடிக்கடி கைகளை நன்றாக கழுவுவதும் பெரிதும் துணைப்புரியும்.
நிமோனியா அறிகுறி இருப்பவர்கள் இருமல் அல்லது தும்மலின் போது வாய் மற்றும் மூக்கை மூடிக் கொள்வதன் மூலம் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும்.
நிமோனியாவை தடுக்க தடுப்பூசி ஒரு முக்கியமான வழியாகும். நிமோகாக்கல் தடுப்பூசி மற்றும் காய்ச்சல் அல்லது காய்ச்சல் தடுப்பூசி ஆகியவை பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் முக்கிய விடயமாகும். அது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |