low bp symptoms: இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ low bp இருப்பது உறுதி
பொதுவாகவே, ரத்த அழுத்தம் தீவிர உடல்நல பிரச்சனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
இந்த நோயை முறையாக பரிசோதிக்காவிட்டால் பல இணை நோய்கள் ஏற்படும் என மருத்துவ உலகம் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் 18 முதல் 54 வயதுக்குட்பட்டவர்களின் 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதன் விளைவாக அதிகமானவர்கள் ரத்த அழுத்தம் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர்.
ரத்த அழுத்தம் பிரச்சினையை கால இடைவெளிக்குள் முறையாக பரிசோதிக்காவிட்டால் இதய நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. சில சமயங்களில் மரணம் கூட ஏற்படலாம். ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்தத அழுத்தம் என இரண்டு வகையாக பிரிகின்றன.
அதில், உயர் ரத்த அழுத்தம் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள், அநேகமாக ஆபத்தான விளைவுகளை சந்திக்கலாம்.
அதே சமயம், குறைந்த ரத்த அழுத்தம் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள், நாளாந்தம் நாம் செய்யும் வேலைகளை பொறுத்து உடலில் இருக்கும் இரத்த அழுத்தம் ஏற்ற இறக்கம் அடையும். அப்படியொரு நிலையில் இரத்த அழுத்தத்தின் அளவு திடீரென குறையும் போது மயக்கம் ஏற்படும், அதுவே குறைந்த ரத்த அழுத்தம் எனலாம்.
இரத்த அழுத்த அளவு குறைவதற்கு மரபணு, கர்ப்பம் அல்லது நீரிழப்பு ஆகியவை முக்கிய காரணங்களாகும். குறைந்த இரத்த அழுத்த பிரச்சனையுள்ளவர்கள் அடிக்கடி மருத்துவரை பார்த்து உரிய ஆலோசனைகளை எடுத்து கொள்வது சிறந்தது.
அந்த வகையில் குறைந்த ரத்த அழுத்தம் பற்றிய விவரங்கள் தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
low bp-யை எப்படி மதிப்பீடு செய்வது?
இரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கும் இயந்திரம்-சிஸ்டாலிக் (மேல் எண்) மற்றும் டயஸ்டாலிக் (கீழ் எண்) ஆகியவற்றில் காட்டப்படும் இரண்டு எண்களின் அடிப்படையில் இரத்த அழுத்தம் மதிப்பீடு செய்யப்படும்.
சிஸ்டாலிக் எண் என்பது இதயம் சுருங்கும் போது உள்ள இரத்த அழுத்தத்தைக் குறிக்கிறது.
அதே சமயம் இதயத்தில் உள்ள தசைகள் ஓய்வெடுக்கும் போது டயஸ்டாலிக் அழுத்தத்தை காட்டுகிறது. இவ்வாறு காட்டப்படும் இரத்த அழுத்தத்தின் அளவு எப்போதும் மில்லிமீட்டர் பாதரசத்தில் (மிமீ எச்ஜி) அளவிடப்படுகிறது.
அதன்படி,
- குறைந்த இரத்த அழுத்த அளவு: சிஸ்டாலிக் 90 மிமீ Hg-க்கு குறைவாக அல்லது டயஸ்டாலிக் 60 மிமீ Hg-க்கு குறைவாக இருக்கும். இதுவே Hypotension எனப்படுகிறது.
- இயல்பான மனிதருக்கு ரத்த அழுத்த அளவு: சிஸ்டாலிக் 120 மிமீ Hg-க்கும் குறைவாகவும் டயஸ்டாலிக் 80 மிமீ Hg க்கும் குறைவாகவும் இருக்கும்.
- உயர் இரத்த அழுத்த அளவு: சிஸ்டாலிக் 120 மிமீ எச்ஜிக்கு மேல் அல்லது டயஸ்டாலிக் 80 மிமீ எச்ஜிக்கு மேல் இருக்கும்.
உங்களின் இரத்த அழுத்த அளவு குறைவாக இருக்கும் பட்சத்தில் அதனை இயல்பு நிலைக்கு கொண்டு வர சிகிச்சை எடுக்க வேண்டும்.
அந்த வகையில் குறைந்த இரத்த அழுத்தம் இருப்பதை எப்படி அடையாளம் காணலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
low bp-இன் சில அறிகுறிகள்
1. low bp இருப்பவர்கள் எப்போதும் தங்களை பலவீனமாகவும் சோர்வாகவும் உணர்வார்கள். திடீரென இரத்த அழுத்தத்தில் வீழ்ச்சி ஏற்பட்டால் நடப்பது கூட கடினமாகி விடும்.
2. தலைசுற்றல் என்பது low bp-யின் முக்கிய அறிகுறியாக உள்ளது. இது ரத்த அழுத்தம் மிகக் குறைவாக இருக்கும் பட்சத்தில் மனிதர்களுக்கு ஏற்படும்.
3. low bp மற்றும் நீரிழப்புக்கும் இடையில் நெருங்கிய உறவு உள்ளது. இரத்த அழுத்தம் குறையும் போது அதிக வறட்சியடையும்.
4. உடலின் உறுப்புகளுக்கு இரத்த அழுத்தம் போதிய அளவில் இல்லாமல் இருக்கும் போது கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படும். அருகில் இருக்கும் பொருட்களை கூட சரியாக பார்க்க முடியாத நிலை இருக்கும். வேலை செய்பவர்களாக இருந்தால் அவர்களால் சரியாக வேலை செய்ய முடியாது.
5. குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் குளிர்ச்சியாகவும், வியர்வையாகவும் மாற்றக்கூடியதாக இருக்கும்.
6. நீங்கள் சுவாசிக்கும் விகிதம்அதிகரிக்கும் போது இதயத்துடிப்பு பலவீனமடைவதை அவதானிப்பீர்கள். இந்த அறிகுறியை நீங்கள் கண்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
வேறு அறிகுறிகள்
* தடிப்புகள்
* இறுக்கமான ஒரு உணர்வு
* மூச்சுத் திணறல்
* மயக்கம், அல்லது குழப்பம்
* வாய், நாக்கு, தொண்டை அல்லது உதடுகளின் வீக்கம்
* உணவு விழுங்குவதில் சிக்கல்
* நடுக்கம்
* வியர்வை அல்லது மிருதுவான தோல்
* தீவிர அசௌகரியம்
* அதிக இதய துடிப்பு
உடனடியாக வீட்டில் செய்யக் கூடிய வைத்தியம்
* எப்போதும் தண்ணீர் குடிக்க வேண்டும்.
* மது அருந்துவதை தவிர்க்கவும்
* ஆரோக்கியமான மற்றும் சோடியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
* தக்காளி சாற்றை தவறாமல் குடிக்க வேண்டும்.
* இரத்த ஓட்டத்தைத் தூண்ட படுக்கையில் இருந்து எழுவதற்கு முன்பு உங்கள் கால்களுக்கு கொஞ்சமாக அசைவு கொடுக்க வேண்டும்.
* உரிய மருத்துவரின் ஆலோசனையை எப்போதும் பெற வேண்டும்.
குறைந்த இரத்த அழுத்தம் எதனால் ஏற்படுகிறது?
1. சிலர் அமர்ந்திருந்திருக்கும் பொழுது ஏதாவது காரணத்திற்காக திடீர் என எழுந்து நிற்பார்கள். அந்த சமயம் மூளைக்கு அதிகமான இரத்த ஓட்டம் இருக்கும். இதனால் உங்களுக்கு லேசான தலைச்சுற்றல் இருக்கும். இதுவே Orthostatic hypotension எனப்படுகின்றது.
2. பார்கின்சன் நோய் ( Parkinson’s disease) எனப்படுவது உங்களின் நரம்பு மண்டலம் பாதிக்கும். இது உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும். இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்ட பின்னர் இதற்கான அறிகுறிகளை அறியலாம். ஏனெனில் அவர்களின் செரிமான அமைப்புகள் உணவை ஜீரணிக்கும் போது அதிக இரத்தயோட்டம் அதிகமாக இருக்கும்.
3. விழுந்து அல்லது கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு காயங்களில் இருந்து ரத்தம் வழியும் போது குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
4. உங்களின் இதயம் வேகமாக அல்லது மெதுவாக துடிக்கும் போது குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படலாம். அந்த சமயம் இதயம் செயலிழப்பு (பலவீனமான இதய தசை) கூட ஏற்படலாம்.
5. மது பழக்கம், மருந்துவில்லைகள் பாவனை, வைட்டமின் எடுத்து கொள்ளல் ஆகிய பழக்கங்களினால் குறைந்த ரத்த அழுத்தம் பிரச்சினை ஏற்படலாம். இவற்றை தடுக்க நினைப்பவர்கள் முடிந்தவரை மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துவில்லைகளை எடுத்துக் கொள்வது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |