பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய விருப்பமா? அப்போ இந்த மருத்துவ ஆலோசணை உங்களுக்காக..
பொதுவாக தற்போது இருக்கும் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் இருபாலாரும் முக அழகு மற்றும் உடல் ஆரோக்கியத்தில் அதிகமான ஈடுபாடு காட்டி வருகிறார்கள்.
அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்கள் தன்னுடைய முக அழகை எப்படியெல்லாம் பராமரிக்கலாம் என்பதற்கு புது புது டிப்ஸ்களை கொடுத்தும் வருகிறார்கள்.
தற்போது வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சியில், முக அழகை மேலும் மெருகூட்டுவதற்காக சில சிகிச்சைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முகத்திற்கு என்ன சிகிச்சை செய்தாலும் அதனை பிளாஸ்டிக் சர்ஜரி என சொல்லும் மக்களுக்கு தெளிவு கொடுக்கும் வகையில் மருத்துவர் ஒருவர் இது குறித்து பேசியிருக்கிறார்.
கொலாஜன் சப்ளிமெண்ட்ஸ் எடுப்பது நன்மையா?
சாதாரண சிகிச்சைக்கும், பிளாஸ்டிக் சர்ஜரிக்கும் இடையிலான வித்தியாசங்களையும் அப்படியான சிகிச்சைகள் என்றால் என்ன? அதன் விளைவுகள் என்ன? என்பதையும் விளக்கமாக கூறியிருக்கிறார். அத்துடன் 25 வயதை கடந்த பெண்களுக்கு முகத்தில் வயது தெரிய ஆரம்பிக்கும். அப்போது அவர்கள் கொலாஜன் எடுத்துக் கொள்ளலாம் என்பதையும் பரிந்துரை செய்திருக்கிறார்.

மேலும், கொலாஜன் எடுத்து கொள்ளும் பொழுது வெறும் சருமம் மட்டுமல்லாமல் மூட்டுகள், எலும்புகள் மற்றும் இரத்த நாளங்களின் ஆரோக்கியத்திற்கும் அவசியமான புரதமாக உள்ளது. இதனை மீன், சிக்கன், முட்டை, பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகிய உணவுகளில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இது தெரியாதவர்கள் கொலாஜன் சப்ளிமென்ட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அதனை வாங்கிக் கூட எடுத்து கொள்ளலாம். ஆனால் உங்களுக்கு ஏற்ற கொலாஜனை உங்களை பார்க்கும் மருத்துவர் தான் பரிந்துரை செய்ய வேண்டும்.

நம்மிள் பலரும் முக அழகிற்காக செய்து கொள்ளும் சிகிச்சைகள் பெரிதாக பலனளிப்பது இல்லை. அவை முகத்திற்கு கேடு விளைவிக்கும் என நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் குறித்த மருத்துவரின் பேட்டியை பார்க்கும் பொழுது முகத்திற்கு செய்து கொள்ளும் சிகிச்சைகள் பெரும்பாலும் உடலுக்கு நன்மையையே தருகின்றன.
இது போன்று முக அழகை பராமரிப்பதற்காகவும், அதற்காக செய்யும் கொள்ளும் சிகிச்சைகளின் பலன்கள் பற்றியும் தொடர்ந்து பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |